Itz My Website!

Blog Archive

Tuesday, December 13, 2011

சேவாக்,டோனி உட்பட 16 இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்பொழுது கூகுள் பிளசில்



கூகுள் நிறுவனம் தனது புதிய சமூக தளமான கூகுள் பிளசை வெற்றி பாதையில் அழைத்து செல்ல பலமுயற்சிகளை கையாண்டு வருகிறது. குறிப்பாக இந்திய வாசகர்களை கவர்வதில் அதிக கவனம் கொடுத்து வருகிறது. முதல் கட்டமாக இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் கூகுள் பிளசில் இணைத்தது. இந்தியர்கள் கிரிக்கெட்டின் தீவிர ரசிகர்கள் என்பது உலகமறிந்த உண்மை இது கூகுளுக்கு தெரியாதா என்ன? இப்பொழுது தனது அடுத்த கட்டமாக இந்திய கிரிக்கெட் வீரர்களை கூகுள் பிளசில் இணைய வைத்துள்ளது கூகுள் நிறுவனம்.





மேலும் வாசிக்க

Monday, December 12, 2011

விக்கிபீடியாவில் ஒவ்வொரு நொடிக்கும் என்ன நடக்கிறது என நேரடியாக காண - Wiki Stream





விக்கிபீடியா என்பதற்கு பதில் தகவல்களின் களஞ்சியம் என்று இந்த தளத்தை கூறலாம். நமக்கு எதை பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டுமானால் இணையத்தில் வேறெங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. இந்த தளத்திற்கு சென்று தேடினால் நிச்சயம் அதற்க்கான பதில் கிடைக்கும். இந்த விக்கிபீடியா தளம் பல மொழிகளில் தகவல்களை வழங்குகிறது. ஒவ்வொரு நிமிடதிறக்கும் பல நூற்றுகணக்கான புதிய தகவல்கள் பதிவேற்றப்படுகிறது. இந்த விக்கிபீடியா தளத்தில் ஒவ்வொரு வினாடியும் என்ன நடக்கிறது. என்னென்ன புதிய தகவல்கள் பகிரப்படுகிறது என அறிய வேண்டுமா பதிவை தொடருங்கள்.


மேலும் வாசிக்க

பதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்

இணையதளங்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து கொண்டு உள்ளது. இலவச பிளாக்கர் தளங்களில் இருந்து அடுத்த கட்டமாக தங்கள் வலைப்பூக்களுக்கு தனி டொமைன் பெயரை வாங்கி உபயோகிக்கும் எண்ணம் பலரிடம் வந்துள்ளது. தங்கள் கருத்துகளையும் சமூக அவலங்களையும் பதிவர்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் அழகாக முன்னெடுத்து வைக்கின்றனர். பதிவர்கள் பதிவு எழுதி முடிந்ததும் தங்கள் பப்ளிஷ் செய்வதற்கு முன் பல விஷயங்கள் உங்கள் பதிவில் சரியாக இருக்கிறதா என சோதிக்க வேண்டும். அப்படி சோதிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்று இங்கு காண்போம்.



1. பதிவை டைப் செய்த பிறகு மீண்டும் வாசித்தீர்களா?
நம்முடைய எல்லோருக்கும் நேரம் என்பது பெரிய பிரச்சினையா உள்ளது. நமக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் அவசரமாக பதிவு எழுதினாலும், நாம் பதிவு எழுதி முடித்தவுடன் மீண்டும் முதலில் இருந்து வாசிக்க வேண்டும். அவசரத்தில் ஏதேனும் வரியை விட்டிருக்கலாம், அல்லது ஒரே வரியை இரண்டு முறை முறை டைப் செய்து இருக்கலாம், ஏதேனும் ஒரு இடத்தில் வாக்கியங்கள் மாறுபட்டுட்டு இருக்கலாம், அல்லது ஏதேனும் பத்தியை முடிக்காமல் அடுத்த பத்திக்கு தாவி இருக்கலாம் இது போன்ற பிழைகளை கண்டறிய பதிவை முடித்த பின் ஒரு முறை படிப்பது சிறந்தது. 


2.பதிவிற்கான படங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா?
ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஒரு பதிவில் நாம் கூற வரும் விஷயம் வாசகர்களிடையே எளிதாக சென்று சேர படங்கள் என்பது இன்றியமையாத ஒன்று. அல்லது பதவில் நகைச்சுவைக்காகவும், வாசகர்களை கவரும் விதமாகவும் பல விட படங்களை பதிவில் இணைக்கிறோம். பதிவை டைப் செய்து முடித்தவுடன் அதற்க்கான படங்களை சேர்த்து விட்டோமா, சேர்த்துள்ள படங்கள் அனைத்தும் சரியான இடத்தில் உள்ளதா என சோதித்து கொள்வது நல்லது.


3) லிங்க் சரி பார்த்தல்:
ஒரு பதிவில் ஏதேனும் இணைய தளங்களுக்கு லிங்க் கொடுப்பதாக இருந்தாலோ அல்லது உங்களுடைய முந்தைய பதிவிற்கு லிங்க் கொடுப்பதாக இருந்தாலோ பதிவை முடித்த பின் லிங்க் கொடுத்து விட்டோமா என சோதித்து கொள்வது நல்லது. அது மட்டுமில்லாமல் நீங்கள் கொடுத்த லிங்க் சரியாக இயங்குகிறதா, கிளிக் செய்தால் சரியான இடத்திற்கு செல்கிறதா என சோதித்து கொள்ளவும்.  


4) பிழை சரிபார்த்தல்:
சமீபத்தில் இந்த எழுத்து பிழையால் பதிவுலகில் பெறும் பிரச்சினை ஆனதை அனைவரும் அறிவோம். பதிவில் எழுத்துப்பிழை ஏற்படுவது இயல்பு தான். எழுத்துப்பிழை இல்லாமல் எழுதுவது மிகவும் அரிது ஆனால் பதிவை முடித்தவுடன் மீண்டும் வாசிப்பதால் நாம் தவற விட்ட எழுத்துப்பிழைகளை கணிசமாக குறைக்க முடியும். எழுத்துப்பிழையை குறைத்தால் வாசகர்களுக்கும் நம் பதிவு சுலபமாக புரியும். முடிந்த அளவு எழுத்துப்பிழையை குறைத்து கொள்வது நல்லது.


5) PREVIEW பார்த்தல்:
பிளாக்கரில் PREVIEW என்ற ஒரு வசதி உள்ளது. Publish பட்டனுக்கு அருகிலேயே இந்த PREVIEW பட்டனையும் கொடுத்து இருப்பார்கள். அந்த PREVIEW பட்டனை கிளிக் செய்தால் உங்களுடைய பதிவு பப்ளிஷ் செய்யப்பட்ட பிறகு வலைப்பூவில் எப்படி தெரியும் என முன் கூட்டியே பார்த்து கொள்ளலாம்.  பதிவர்கள் பப்ளிஷ் செய்வதற்கு முன் இந்த வசதியை கண்டிப்பாக பார்க்க வேண்டும். 


6) தலைப்பு சரிபார்த்தல்:
பதிவு மட்டுமல்ல எல்லாத்துக்குமே தலைப்பு ரொம்ப முக்கியம். ஒரு பதிவின் தலைப்பு என்பது பதிவிற்கு சம்பந்தமாகவும் அதே சமயம் வாசகர்களை கவரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். பதிவின் தலைப்பை முடிந்த அளவு சிறியதாக வைக்க வேண்டும் ஆனால் பதிவின் பொருள் மாறிவிடக்கூடாது. பதிவிற்கு சம்பந்தமாக தலைப்பு வைப்பதால் தேடியந்திரங்கள் மூலம் வரும் வாசகர்களுக்கு சரியான பதிவை அடையாளம் கண்டறிந்து வர உதவும்.


7) ஹிட்ஸ் கிடைக்க ஏற்ற நேரமா என சோதித்தல்:
தரமான பதிவுகள் எந்த நேரத்தில் வெளியிட்டாலும் அதிக வாசகர்களை கவரும் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். ஒரு பதிவர் தான் வெளியிடும் பதிவு பெரும்பாலான வாசகர்களுக்கு சென்று சேர வேண்டும் என நினைப்பார். நிறைய பேருக்கு போய் சேர வேண்டும் என மனதில் நினைத்து கொண்டு இரவு 12 மணிக்கு(பேய் வரும் நேரத்தில்) பதிவு போட்டால் யார் படிப்பார்கள். காலைக்குள் உங்கள் பதிவுகள் திரட்டிகளில் பின்னுக்கு தள்ளப்பட்டு விடும். ஆகையால் பதிவை வெளியிடும் பொழுது தக்க நேரத்தில் வெளியிடவும். 


8) Schedule போஸ்ட் என்றால்:
உங்களுடைய பதிவை Schedule செய்து குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே பப்ளிஷ் ஆகும் படி வைக்க எண்ணினால் பப்ளிஷ் செய்வதற்கு முன் நேரத்தை தேர்வு செய்து விட்டீர்களா என சோதித்து கொள்ளவும். நேரத்தை தேர்வு செய்யாமல் பப்ளிஷ் பட்டனை அழுத்தினால் எப்பொழுதும் போல பப்ளிஷ் ஆகிவிடும். ஆகையால் பதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன் இதை சோதித்து கொள்வது நல்லது. 


ஒவ்வொரு பதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன்னரும் இந்த விஷயங்களை சரிபார்த்து பிறகு பப்ளிஷ் செய்யவும். 







முல்லை பெரியாறு பிரச்சினை இணையத்தில் உங்கள் ஆதரவை தெரிவிக்க:

நண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.





நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.



பதிவர் நண்பர்களே இந்த செய்தியை உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டு பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நம் சமூகத்தை காக்க உதவுங்கள்.

Saturday, December 10, 2011

வொய் திஸ் கொலைவெறி டி பாடல் செய்ய போகும் அடுத்த சாதனை

சமீபத்தில் வெளியான கொலைவெறி டி என்ற பாடல் யூடியூபில் சக்கை போடு போட்டு கொண்டு இருக்கிறது. இது வரை மட்டுமே பார்வையாளர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டது.  யூடியுப் தளமும் தங்க மெடல் கொடுத்து கவுரவித்தது. ஒரு தமிழ்(தங்லிஷ்) பாடல் யூடியூபில் இந்த அளவு பார்க்க பட்டிருக்குமா என்பது சந்தேகமே. இந்த பாடலுக்கு இவ்வளவு வரவேற்ப்பு இருப்பினும் சோனி நிறுவனம் வெளியிட்டதால் தாள் தான் இந்த வரவேற்ப்பு என்ற கருத்தும் இருக்கிறது. எப்படியோ இன்றைய இளைஞர்களின் தேசிய கீதமாக இந்த பாடல் மாறி இருக்கிறது. இவ்வளவு மகுடங்களை பெற்ற இந்த பாடல் அடுத்ததாக ஒரு சாதனையை செய்ய இருக்கிறது.

மேலும் வாசிக்க

Friday, December 9, 2011

கூகிள் பிளஸ் சாட்டை ஜிமெயிலில் Disable செய்வது எப்படி?

வாசகர்களை கவர கூகுள் பிளஸ் தளம் எண்ணற்ற மாற்றங்களையும் வசதிகளையும் வழங்கி கொண்டு உள்ளது. பேஸ்புக் தளத்தை விட உபயோகிப்பதற்கு எளிமையாகவும், வசதிகளையும் கூகுள் பிளஸ் தளம் கொண்டுள்ளது என்பது உண்மை.  சமீபத்தில் புதிய வசதியாக கூகுள் பிளஸ் வட்டத்தில் உள்ள நண்பர்களிடம் Chat செய்யும் வசதியை கூகுள் அறிமுக படுத்தியது. அந்த வசதியின் மூலம் கூகுள் பிளஸ் வட்டத்தில் உள்ள அனைத்து நண்பர்களிடமும் ஜிமெயிலில் இருந்தே அரட்டை அடித்து மகிழலாம். ஆனால் கூகுள் பிளசில் உள்ள அனைத்து நண்பர்களும் உங்கள் ஜிமெயில் சாட் லிஸ்டில் வந்துவிடுவது பிரச்சினையாக உள்ளது பல பேர் கருதுகிறார்கள். ஜிமெயிலில் நுழைந்தாலே பெரும்பாலானவர்கள் chat செய்வதால் அவர்களுக்கு பதில் கூற முடியாமல் தர்ம சங்கடமான நிலைக்கு ஆளாவதாக எண்ணுகிறார்கள். ஆகவே இந்த வசதியை எப்படி ஜிமெயிலில் இருந்து நீக்குவது என பார்ப்போம்.



மேலும் வாசிக்க

ஆயிரம் கோடி டவுன்லோடை தாண்டியது ஆன்ட்ராய்ட் மென்பொருட்கள் மற்றும் ஒரு புதிய சலுகை



ஆப்பிளுக்கு போட்டியாக கூகுள் ஆரம்பித்த Android ஓபன் சோர்ஸ் மென்பொருள் இப்பொழுது பரவலாக அனைத்து மொபைல்களிலும் உபயோகப் படுத்தப்படுகிறது. ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் போன்று Android நிறுவனமும்  Android Market என்ற தளத்தை உருவாக்கி Android மொபைல்கள் மற்றும் Tablet கணினிகளில் உபயோகப்படுதக்கூடிய அப்ளிகேஷன்களை வழங்கி வருகிறது. இந்த தளத்தில் கட்டன மென்பொருட்கள் மற்றும் இலவச மென்பொருட்கள் அனைத்து மென்பொருட்களும் தரவிறக்கி கொள்ளலாம்.  இப்பொழுது அந்த தளத்தின் டவுன்லோட் செய்யப்பட மென்பொருட்களை எண்ணிக்கை ஆயிரம் கோடியை தாண்டி விட்டதாக கூகுள் நிறுவனம் அதன் பிளாக்கில் தெரிவித்து உள்ளது.

மேலும் வாசிக்க

Thursday, December 8, 2011

ஜிமெயிலில் மேலும் சில புதிய வசதிகள்

கூகிள் தனது புதிய தளமான கூகுள் பிளசிற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு வசதிகளை உருவாக்கி வருகிறது. இப்பொழுது ஜிமெயில் தளத்தில் மேலும் பல புதிய வசதிகளை புகுத்தி உள்ளது. இந்த புதிய வசதிகள் அனைத்தும் கூகுள் பிளஸ் தளத்தை பொறுத்தே அமைந்து உள்ளது. ஜிமெயிலில் இருந்தே உங்கள் வட்டத்தில் புதிய நண்பர்களை சேர்க்கலாம், கூகுள் பிளஸ் வட்டத்தை ஜிமெயில் contacts பகுதியில் பார்த்து கொள்ள மற்றும் ஜிமெயில் கான்டக்ட் ஆட்டோமேடிக் அப்டேட் போன்றவை. இவைகளை பற்றி விரிவாக கீழே பார்ப்போம்.

மேலும் வாசிக்க

உங்கள் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டால் எச்சரிக்கை அனுப்பும் தளம்- Earth quake Alert

இந்த டிசம்பர் மாதத்தை யாரும் மறக்க முடியாது. பூகம்பத்தினால் ஏற்ப்பட்ட சுனாமி என்ற அசுர பேரலைகள் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்த கொடூர சம்பவம் நடந்தது இந்த மாதத்தில் தான். பூகம்பங்கள் தான் இந்த சுனாமிக்கு காரணம். தினமும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் நில நடுக்கங்கள் ஏற்படுகின்றனவாம். உங்கள் ஏரியாவில் உங்கள் ஊரில் நிலநடுக்கங்கள் ஏற்ப்பட்டால் உங்கள் மெயிலுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பும் சேவையை ஒரு தளம் வழங்கு கிறது.



மேலும் வாசிக்க

Wednesday, December 7, 2011

Android மொபைல்களுக்கான VLC Media Player மென்பொருள் இலவசமாக

உங்கள் அனைவருக்கும் VLC மீடியா பிளேயர் பற்றி தெரிந்திருக்கும். பெருமாலானவர்களால் பயன்படுத்தப்படும் இலவச மீடியா பிளேயர் மென்பொருள். இந்த VLC மென்பொருள் வெறும் பிளேயராக மட்டுமில்லாமல் பல்வேறு மறைமுக வசதிகளையும் கொண்டுள்ளது. கணினிகளுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த VLC மீடியா பிளேயர் தற்பொழுது மொபைல்களில் பயன்படுத்தவும் வந்து விட்டது. இந்த VLC Media Player மென்பொருள் Video Lan நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்டது. இது ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருள் ஆகும்.

மேலும் வாசிக்க

Tuesday, December 6, 2011

அலெக்சாவில் அசத்தும் தமிழ் பதிவர்கள் 2011 - Top Tamil blogs and bloggers

வலைப்பூக்களில் எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. மொழி பாகு பாடு இன்றி அவரவர்க்கு தெரிந்த மொழிகளில் வலைப்பூக்களில் எழுத்துகின்றனர். ஆனால் ஆங்கில வலைத்தளங்களுக்கு ஏராளாமான திரட்டிகளும், தேடியந்திரங்களும், சமூக தளங்களும் கை கொடுக்கும் நிலையில் வெறும் சில திரட்டிகளின் உதவியுடன் அலேக்சாவில் சாதிக்கும் தமிழ் பதிவர்களை பற்றி இங்கு காண்போம். பல ஆங்கில தளங்களையும் முந்தி கொண்டு நாங்களும் உங்களுக்கு இளைத்தவர்கள் இல்லை என சவால் விடும் வகையில் அலெக்சா ரேங்கில் 1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள பதிவர்களை அனைவரும் வாழ்த்துவோம்.





மேலும் வாசிக்க

சில பதிவர்கள் செய்யும் தவறுகள் (பாகம் 1)

இன்றிலிருந்து பதிவர்கள் பதிவர்கள் செய்யும் சில அடிப்படை தவறுகளை பற்றி ஒரு தொடராக எழுத உள்ளேன். புதியதாக பதிவுலகம் வரும் பதிவர்கள் இந்த தவறுகளை செய்யாமல் இருக்க உதவும் என்ற நம்பிக்கையில் இந்த தலைப்பை தேர்வு செய்தேன். பதிவர்கள் செய்யும் தவறுகள் வரிசையில் முதலாவதாக நாம் பார்க்க இருப்பது காப்பி&பேஸ்ட் சம்பந்தப்பட்டது. பதிவுலகத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளதால் இந்த விஷயத்தை முதலில் எழுதுகிறேன்.



மேலும் வாசிக்க

Monday, December 5, 2011

Bigrock டொமைனை பிளாக்கரில் செயல்படுத்துவது எப்படி [முழு விளக்கம் படங்களுடன்]

நாளுக்கு நாள் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை கூடிகொண்டே உள்ளது. புதிய பதிவர்கள் புற்றீசல் போல உருவாகி கொண்டே உள்ளது. வலை பதிவர்கள் அடுத்த கட்டமாக அவர்களின் வலைப்பூக்களை சொந்த டொமைனுக்கு மாற்ற விரும்புகின்றனர். பிளாக்கர் மூலம் டொமைன் வாங்க வேண்டுமென்றால் கிரெடிட் கார்ட் அவசியமாகிறது. இதனால் debit card, net banking, offline payment போன்ற வசதிகளை வழங்கும் Bigrock தளத்தை நாடி செல்கின்றனர். கூகுளில் டொமைன் வாங்கினால் நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை தானாகவே Re-direct ஆகிவிடும். ஆனால் Bigrock தளம் மூலம் டொமைன் வாங்கினால் பழைய தளத்திலிருந்து நாம் தான் புதிய தளத்திற்கு Redirect செய்ய வேண்டும். அதை எப்படி செய்வது என பார்ப்போம்.

மேலும் வாசிக்க

எனக்குள் நான் பய(ங்கர)டேட்டா - வந்தேமாதரம்

நான்: அப்பா வச்சது சசிகுமார், அம்மா வச்சது சுதாகர், பதிவுலகம் வச்சது வந்தேமாதரம் சசி.



பிறந்த நாள்: 10-05-1984



பிறந்தது: மீஞ்சூரில் உள்ள பாட்டி வீடு.



இருப்பது: இதுவும் மீஞ்சூர் தான்.



படிப்பு: டிப்ளோமா கம்ப்யுட்டர் டெக்னாலஜி, இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இதர



வேலை: ஆசையாய் படிச்ச எதுவும் வேலை வாங்கி தரல. அப்பாவின் வற்புறுத்தலுக்காக படிச்சது தான் இப்ப சோறு போடுது. கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் Desinger ஆக உள்ளேன்.



பிடிச்ச விஷயங்கள்: மனைவி, நண்பர்கள், பதிவுலகம் என நிறைய இருந்தாலும் இப்பொழுது என்னுடைய மகள் தான்.



பிடிக்காதது: சீக்கிரம் வரேன்னு சொல்லிட்டு வெகு நேரம் காக்க வைப்பவரை ( திரும்பவும் எப்ப கூப்பிட்டாலும் போக கூடாதுன்னு நினைப்பேன்)



நட்புகள்: ஒரு குரல் கொடுத்தால் ஓடி வந்து உதவ நிறைய நண்பர்கள் இருக்காங்க



காதல்: வெற்றி



பாசத்துக்கு: அம்மா தான் எப்பவுமே. அடுத்த இடத்தில் தான் மனைவி.



மறக்க முடியாதது: அம்மாவை



மறக்க நினைப்பது: கவலைகளை



சந்தோஷம்: பணியில் இருந்து வீட்டுக்கு சென்றவுடன் அப்பா அப்பா என்று ஓடிவரும் அன்பு குழந்தை பார்க்கும் பொழுது.



பலம்: கேட்டவுடனே அல்லது பார்த்தவுடனே ஒரு விஷயத்தை முழுவதுமாக புரிந்து கொள்வது. ஏதாவது பிரச்சினை என்றால் முன்னாடி வரும் நண்பர்கள் (உறவினர்களை விட)



பலவீனம்: எல்லோரையும் நம்பி விடுவது(இப்பொழுது மாறிவிட்டேன்), மறதி



கோபம்: அடிக்கடி வரும் மறையும்(தேவை இல்லாமல் வராது).



ஏமாற்றம்: அதிக எதிர்பார்ப்பு இருந்தால் தானே ஏமாற்றம் வரும். நான் எதையும் அதிகம் எதிர்பார்க்க மாட்டேன். அப்படியும் சொல்லனும்னா வேலை எதுவும் இருக்காது அரைநாள் வீட்டுக்கு வந்துடலாம்னு போனா எதாவது வேலை இருப்பது.



பொழுதுபோக்கு: மனைவி குழந்தையுடன் சேர்ந்து டிவி பார்ப்பது, தற்பொழுது இணையத்தில் உலவுவது



ரசிப்பது: பொய் சொல்ல விரும்பல சார். எனக்கு ரசிப்பு தன்மை கொஞ்சம் குறைவு. குழந்தைகள் பேசுவது பிடிக்கும்.



பிடிச்ச சுற்றுலா தளம்: வயநாடு கேரளா, ஊட்டி



நிறைவேறாத ஆசை: ஒரு நாள் முழுக்க விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை இதுவரை நிறைவேறவில்லை.



கடவுள்: எல்லாருமே



பதிவுலக பெருமை: உலவில் சிறந்த பதிவராக வந்தது.



தற்போதைய சாதனை: இதுல என்ன எழுதுறதுன்னு தெரியலங்க. (ஏதாவது பண்ணா தானே எழுத)





பிடித்த வரிகள்: (இணையத்தில் படித்தது)



"கிளையில் அமர்ந்துள்ள பறவைக்கு காற்றில் கிளைகள் அசைவதால் பயம் இல்லை. காரணம் அவைகள் கிளைகளை நம்புவதில்லை!தன் சிறகுகளை நம்புகின்றன"



"வெற்றிக்கு பின் ஓய்வு எடுக்காதீர்கள் நீங்கள் பெற்றது வெற்றி அல்ல அதிர்ஷ்டம் என சொல்ல பல உதடுகள் காத்து கொண்டிருக்கிறது"



(பெரும்பாலும் நான் எந்த தொடர் பதிவையும் எழுதுவதில்லை என்னை பற்றி அறிந்து கொள்ள உதவும் என்பதால் இந்த பதிவு. தொடரை எழுத அழைத்த நம்ம வியட்நாம்காரருக்கு நன்றி... )



Tech Shortly


Sunday, December 4, 2011

Airtel GPRS new Offer: ட்விட்டரை இலவசமாக உபயோகிக்க

மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது. மொபைல் சேவை நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகமாகி கொண்டு உள்ளது. ஆதலால் மொபைல் நிறுவனங்களும் புதிய சலுகைகளை வாசகர்களுக்கு வழங்கி வாசகர்களை கவர்கிறது. அந்த வகையில் பிரபல மொபைல் சேவை நிறுவனமான Airtel நிறுவனம் ஒரு புதிய சலுகையை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளது. பிரபல சமூக இணையதளமான ட்விட்டர் தளத்தை இலவசமாக உபயோகித்து கொள்ளலாம்.



மேலும் வாசிக்க

Assassins Creed 2 Lost Money ($54.02 Million) அப்போ வேலாயுதம்?!


 

Assassins Creed 2 Lost Money ($54.02 Million)


No s***. What do you get when you mix a medicore game with tons of DRM crap. A loss. Now watch them blame all the dirty pirates out there for this one, lol, fools. Here is the story from Gamasutra :French Splinter Cell publisher Ubisoft recorded a decrease in sales and a loss for the fiscal year ended March 31, 2010, blaming worldwide economic downturn.

The company on Tuesday recorded a 17.7 percent drop in annual sales to €871 million ($1.08 billion), and posted a loss of €43.7 million ($54.02 million).

Ubisoft CEO Yves Guillemot said in a statement, “The global economic crisis had a pronounced impact on the video game industry in 2009, which contracted by nearly 10 percent year-on-year.”

“Ubisoft’s sales were hit particularly hard, falling 18 percent over the full year despite a stabilization in the second half of the year, when figures came in on a par with the corresponding period of 2008-09,” he added.

Fourth quarter sales were €200 million ($247.32 million), slightly higher than guidance but lower than the €206 million ($254.76 million) recorded for the same quarter a year ago.

During Q4, Ubisoft said that it had strong sales ofJust Dance for Wii, which has seen 3 million units sold-in. The publisher also said that November’s Assassin’s Creed II has reached nearly 9 million units sold-in during the fiscal year.

Ubisoft noted the strong reviews of Red Steel 2 for Wii, and said the game’s performance was in line with recently-revised forecasts. In addition, sales of Avatar exceeded forecasts, “notably on Wii,” Ubisoft said.

Guillemot said during a conference call that Ubisoft will continue to support Nintendo’s platform, but with a focus on family-friendly titles.


Vijay’s joy on his Velayutham success at his residence!!




vijay-celebrates-velayutham-success
‘Velayutham’, the film that was released this Diwali is declared a big hit and the makers of the film is more than happy about the outcome of the film and for the fact that it has been making collections at the box-office.
Recently, the film crew celebrated the success of the movie. ‘Ilaya Thalapathy’ Vijay organized a small party for his friends and makers of the film at his residence yesterday night. Vijay antony, Director Jeyam Raja, actor Jeyam Ravi and few other film biggies graced the party.
A cake was arranged to mark the event and Vijay celebrated this grand success with his friends. It is heard that Vijay himself served the pieces of cake and shared his joy with everyone. Recently, a press meet also held on the eve of movie’s success.
‘Velayutham’ features Vijay, Genelia D ‘Souza, Hansika Motwani, Saranya Mohan, Santhanam in the lead and produced by Aaskar Ravichandran.
vijay-celebrates-velayutham-success1
vijay-celebrates-velayutham-success2
vijay-celebrates-velayutham-success3

 enna koduma sir ithu?!!!
Game (Original) Lost... Film (Copy) Won ah?!!!!!!!!

Saturday, December 3, 2011

கணினிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் - Microsoft Security Essential

இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. பத்து பேர் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை ஒரே ஒரு கணினி வைத்து கொண்டு செய்து விடலாம். எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ, அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் கணினியில் புகுந்து கணினியில் வைத்திருக்கும் முக்கியமான டேட்டாக்களை அழிப்பதுடன் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது.

மேலும் வாசிக்க

Friday, December 2, 2011

பயர்பாக்சை முந்தியது கூகுள் குரோம் [Stats Counter]



இணையத்தில் உலவிகளுக்கான போட்டியில் பயர்பாக்ஸ் உலவியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது குரோம். குரோமின் எளிமையான தோற்றத்தாலும் இணைய உபயோகம் வேகமாக இருப்பதாலும் பெரும்பாலானவர்கள் குரோம் உலவியை தொடர்ந்து உபயோகித்து கொண்டு இருக்கின்றனர். குரோமின் வளர்ச்சியை கண்டு பல புதிய பதிப்புகளை பயர்பாக்ஸ் வெளிவிட்டாலும்(கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்) கூகுள் குரோம் தொடர்ந்து கணிசமாக வளர்ந்து கொண்டு உள்ளது. Internet Explorer உலவி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.



மேலும் வாசிக்க

Thursday, December 1, 2011

கூகுளில் வர இருக்கும் புதிய அழகான மாற்றம் - Google Bar New Look

கூகுள் நிறுவனத்தின் இணையதளங்களில் அடிக்கடி மாற்றங்கள் செய்து மக்கள் உபயோகத்திற்காக வெளியிடுகிறது. கூகுளின் தளங்களுக்கு சென்றால் Google Bar இருப்பதை பார்த்து இருப்போம். இந்த பாரில் Google Plus, Gmail, Calenders, Documents என கூகுள் சேவைகளின் Link இருக்கும். வாசகர்களும் சுலபமாக மற்ற சேவைகளுக்கு செல்ல பயனுள்ளதாக உள்ளது. இந்த google Bar கருப்பு நிறத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது Google தளம் இந்த Google Bar தோற்றத்தை மாற்ற இருக்கிறது. Horizontal ஆகா தெரிந்த கூகுள் பார் Vertical ஆகா மாற்றப்படுகிறது. பார்ப்பதற்கும் புதிய தோற்றம் அழகாக உள்ளது.



கீழே உள்ள படம் மற்றும் வீடியோவை பாருங்கள்.



மேலும் வாசிக்க

Wednesday, November 30, 2011

அதிக வாசகர்களை கவர்ந்த சிறந்த 10 இடுகைகள் [Nov 2011]

வந்தேமாதரம் வலைப்பூவிற்கு ஆதரவு கொடுத்து வரும் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் மிக்க நன்றி. அனைத்து பதிவுகளை ஹிட்டாக வேண்டும் என்று தான் பதிவு எழுதும் அனைவரும் நினைப்போம். இது தான் மனித இயல்பும் கூட ஆனால் இதில் ஒரு சில பதிவுகளே அதிக வாசகர்களை கவர்கிறது. அந்த வகையில் வந்தேமாதரத்தில் அதிக வாசகர்களை கவர்ந்த சிறந்த 10 இடுகைகளை காண்போம். பதிவுகளை ஒரு மாதத்திற்கான Blogger Stats மூலம் வரிசைப்படுத்தி உள்ளேன். இந்த இடுகைகளை தவற விட்டவர்கள் இப்பொழுது சென்று படித்து கொள்ளலாம்.

மேலும் வாசிக்க

Tuesday, November 29, 2011

கூகுள் அட்சென்ஸ் போல WordPress தளத்தின் புதிய விளம்பர சேவை - Word Ads

அனைவருக்கும் கூகுள் அட்சென்ஸ் பற்றி தெரிந்திருக்கும். பெருமாளான பதிவர்கள் ஆன்லைனில் சம்பாதிக்கும் வசதியை இந்த கூகுள் அட்சென்ஸ் வழங்குகிறது. இணையத்தில் உள்ள வலைப்பூக்களை கூகுள் அட்சென்ஸ் இல்லாமல் பார்ப்பது அரிது. இப்பொழுது கூகுள் அட்சென்ஸ் போல Wordpress தளம் WordAds எனும் புதிய விளம்பர வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வசதியை Federated Media(FM) தளத்துடன் இணைந்து WordPress தளம் வழங்குகிறது.  இனி பதிவர்கள் இந்த WordAds விளம்பரத்தையும் தங்கள் வலைப்பூக்களில் போட்டு அதன் மூலம் கணிசமாக சம்பாதிக்கலாம்.

மேலும் வாசிக்க

Monday, November 28, 2011

ஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் Appointment பெறும் வசதி

இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை UIDAI(Unique Identification Authority of India) என்ற அமைப்பின் மூலம் இந்திய அரசு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்த அடையாள அட்டையை வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் மட்டும் தான் இந்த அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேர் தான் ஒரு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.
மேலும் வாசிக்க

பீட்பர்னரில் Email Delivery நேரத்தை மாற்ற [ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க-3]

பீட்பர்னரில் வாசகர்களை அதிகரிப்பது சம்பந்தமாக இதுவரை இரண்டு (ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க-1ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க-2) பதிவுகளை பார்த்து விட்டோம். Feedburner பற்றி பதிவர்களுக்கு தெரிந்திருக்கும். உங்களுடைய பதிவில் நீங்கள் போடும் பதிவுகள் உங்களின் ஈமெயில் வாசகர்களுக்கு மெயிலில் செல்லும். அவர்கள் அந்த லிங்கில் கிளிக் செய்து உங்கள் தளத்திற்கு வந்து பதிவை படித்து செல்வார்கள். ஆனால் வாசகர்கள் எப்பொழுதும் காலை நேரங்களில் அவரவர் வேலைகளில் பிசியாக இருப்பார்கள் ஆதலால் அந்த நேரத்தில் நம் மெயில் சென்றால் அவர்கள் பார்ப்பது அறிது. மதிய நேரங்களில் கொஞ்சம் நேரம் கிடைக்கலாம் அந்த நேரத்தில் Feedburner ஈமெயில் சென்றால் அவர்கள் அதை படிக்கும் வாய்ப்பு சற்று அதிகமே. அதனால் நமது வலைப்பூவுக்கும் வாசகர்கள் வர வாய்ப்புள்ளது. ஆகவே எப்படி பீட்பர்னரில் நேரத்தை மாற்றுவது என கீழே பாருங்கள். (இது பல பதிவர்களுக்கு தெரிந்து இருக்கும் தெரியாதவர்களுக்காகவே இப்பதிவு)
மேலும் வாசிக்க

Sunday, November 27, 2011

பேஸ்புக் கணக்கை ஒரு ஐடியில் இருந்து வேறொரு ஈமெயில் ஐடிக்கு மாற்றுவது எப்படி?

கூகுள் சேவைகளுக்கு அடுத்தப்படியாக வந்தேமாதரத்தில் அதிக இடுகைகள் இந்த பேஸ்புக் தளத்தை பற்றியதாக தான் இருக்கும். அந்த அளவு பல்வேறு வசதிகள் சமூக இணையதளமான பேஸ்புக்கில் உள்ளது. பெரும்பாலானவர்கள் பேஸ்புக் ஆரம்பிக்கும் பொழுது அவர்களின் பெர்சனல் ஈமெயில் ஐடியில் ஓபன் செய்து விடுகின்றனர். ஆதலால் அவர்களின் ஈமெயில் ஐடிக்கு பேஸ்புக் தளத்தில் இருந்து ஏராளமான ஈமெயில் அறிவிப்புகள் வருவதால் முக்கியமான ஈமெயில்களை கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது. அல்லது உங்களின் பெர்சனல் ஈமெயில் தெரிந்து விடுவதால் அந்த ஐடியை சுலபமாக ஹாக் செய்து உங்கள் ரகசியங்களை கண்டறியும் பிரச்சினையும் உள்ளது. ஆதலால் பேஸ்புக் கணக்கை எப்படி இன்னொரு ஈமெயில் ஐடிக்கு மாற்றுவது என பார்க்கலாம்.



மேலும் வாசிக்க

Saturday, November 26, 2011

பிளாக்கர் பதிவில் Blogger Poll வசதியை இணைப்பது எப்படி?

பிளாக்கரில் பல எண்ணற்ற வசதிகள் உள்ளது. அந்த வசதிகளில் ஒன்று தான் Blogger Poll வசதி. இந்த வசதியின் மூலம் நம் பிளாக்கிற்கு வரும் வாசகர்களிடம் கருத்து கேட்க சிறிய ஓட்டெடுப்பு நடத்த எதுவாக உள்ளது. ஆனால் இந்த வசதியை நாம் பிலாக்கரின் சைட்பாரில் மட்டுமே பயன்படுத்த முடியும். பிளாக்கர் பதிவில் இந்த வசதியை நேரடியாக இணைக்க முடியாது. நம் பதிவில் வாசகர்களிடம் கருத்து கேட்க வேண்டுமானால் poll வசதிக்காக மற்ற தளங்களின் உதவியை நாட வேண்டி உள்ளது. அந்த தளங்களில் உறுப்பினர் ஆகி பிறகு இந்த பிளாக்கர் பதிவில் விட்ஜெட்டை சேர்க்க வேண்டும். ஆனால் இப்பொழுது சிறிய ட்ரிக்ஸ் பயன்படுத்தினாலே போதும் நேரடியாக Blogger Poll வசதியை நம்முடைய பதிவுகளில் இணைத்து விடலாம்.
மேலும் வாசிக்க

ஜிமெயிலில் Automatic Reply Mail அனுப்புவது எப்படி - Vacation Responder

கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவை வசதியான ஜிமெயிலில் ஏராளமான வசதிகள் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த Vacation Responder வசதி. நாம் எப்பொழுதாவது வெளியூருக்கு சென்று விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகள் காரணமாக உங்களின் ஈமெயிலை பார்க்க முடியாமல் போகலாம். அந்த நேரத்தில் உங்களுக்கு அனுப்பப்படும் ஈமேயில்களுக்கு பதில் போட முடியாமல் போய்விடும். உங்களுக்கு மெயில் அனுப்பி விட்டு பதில் வரும் என காத்திருப்பவர்க்கும் ஏமாற்றம் தான் மிஞ்சும். நீங்கள் எப்ப்லோலுது திரும்ப வருகிறீர்களோ அப்பொழுது தான் Reply அனுப்ப முடியும். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவதோடு மட்டுமில்லாமல் ஏதேனும் தொழில் ரீதியான ஈமேயிலாக இருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகும்.



மேலும் வாசிக்க

Friday, November 25, 2011

Youtube- ஐ வீழ்த்த யாகூவின் புதிய வீடியோ தளம்- Yahoo Video

யூடியுப் தளத்தை பற்றி ஏற்க்கனவே அனைவர்க்கு தெரியும் இணையதளங்களில் வீடியோக்களை பகிர மற்றும் கண்டு களிக்க கூகுள் வழங்கும் ஒரு சேவையாகும். குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லியன் வீடியோக்கள் ஒரு மாதத்திற்கு பார்க்கப் படுகிறதாம். இந்தியாவில் ஒருவர் சராசரியாக 58வீடியோக்களை ஒரு மாதத்தில் பார்க்கிறாராம். கூகுளின் தளங்களில் இப்பொழுது மிகப்பெரிய வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது யூடிப் தளம் மட்டுமே. இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த யாகூ நிறுவனம் யூடியுப் தளத்திற்கு போட்டியாக புதிய வீடியோ தளத்தை உருவாக்கி உள்ளது.



மேலும் வாசிக்க

Thursday, November 24, 2011

பாரக் ஒபாமா(Barack Obama) தற்பொழுது கூகுள் பிளசில்

சமீப காலமாக பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க சமூக இணையதளங்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். ட்விட்டர் தளத்தில் உலகில் உள்ள பெரும்பாலான பிரபலங்கள் அனைவரும் கணக்கு வைத்து அவர்களின் கருத்துக்களை எளிதில் அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் கூகுளின் புதிய சமூக இணையதளமான கூகுள் பிளசில் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா இணைந்துள்ளார்.







மேலும் வாசிக்க

Wednesday, November 23, 2011

இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் 10 இணையதளங்கள் 2011

இதற்கு முன் நாம் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் வலைப்பூக்களின் பட்டியலை பார்த்தோம் அந்த வரிசையில் தற்பொழுது நாம் பார்க்க இருப்பது 2011 ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் பத்து இணையதளங்கள் பற்றி காண்போம். பெரும்பாலானவர்கள் கூகுள் தளம் தான் அதிகமாக சம்பாதித்து முதல் இடத்தில் இருக்கும் என நினைப்போம் ஆனால் உண்மை அது அல்ல. ஆன்லைனில் பொருட்களை வாங்க உதவும் அமேசான் தளம் தான் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் இணையதளமாகும்.



மேலும் வாசிக்க

Tuesday, November 22, 2011

யூடியுபின் புதிய அழகான தோற்றத்தை ஆக்டிவேட் செய்ய - Youtube New Look

எப்பொழுதும் கூகுள் நிறுவனம் அதனுடைய இணைய தளங்களின் தோற்றத்தை அடிக்கடி மாற்றி கொண்டே இருக்கும். Blogger, Search, Gmail, Adsense இப்படி சொல்லி கொண்டே போகலாம் அந்த வரிசையில் தற்பொழுது யூடியுப்  இணையத்தில் வீடியோ பகிரும் தளமான யூடியுப் தளத்தையும் இப்பொழுது மாற்றி அமைத்துள்ளது. வழக்கம் போல் இந்த புதிய மாற்றத்தை தற்பொழுது Developer பயனர்களுக்கு மட்டும் அளித்துள்ளது. அந்த வசதியை எப்படி அனைவரும் ஆக்டிவேட் செய்வது என இங்கு பார்ப்போம்.



மேலும் வாசிக்க

உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க

சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.



மேலும் வாசிக்க

Monday, November 21, 2011

பிளாக்கரில் Email Subscribe, Social networks, Feed count அனைத்தும் ஒரே விட்ஜெட்டில் இணைக்க

நாம் பிளாக்கரில் பல்வேறு வசதிகளை விட்ஜெட்களாக உருவாக்கி பிளாக்கரில் இணைத்து  இருப்போம். அந்த வரிசையில் இன்று நாம் ஒரு பயனுள்ள விட்ஜெட்டை எப்படி பிளாக்கரில் இணைப்பது என பார்ப்போம். இந்த Subscribe விட்ஜெட்டில் ஈமெயிலில் பதிவு செய்யும் வசதி மட்டுமின்றி சமூக தளங்களின் பட்டன்களும் சேர்த்து உள்ளது. அது மட்டுமில்லாமல் எத்தனை பேர் ஈமெயில் வாசகர்களாக உள்ளனர் என காட்டும் Feed Count பட்டனும் இணைக்கப்பட்டுள்ளது. ஆக Email Subscribe, Social Networks, Feed Count என அனைத்தும் ஒரே விட்ஜெட்டில் இருப்பதால் இதற்க்கு என தனித்தனி விட்ஜெட் வைக்க தேவையில்லை.

மேலும் வாசிக்க

குறைந்த விலை ஆகாஷ்(Tablet) கணினிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய- Aakash Tablet with Android2.2

இந்தியாவில் முதன் முதலாக Datawind நிறுவனத்தினர் மிகக்குறைந்த விலையே உள்ள Tablet கணினிகளை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இதற்க்கு ஆகாஷ் என்று பெயரிட்டு உள்ளனர். Datawind நிறுவனத்தினர் ரூபாய் 2,250 விலையில் 10,000 கணினிகளை Indian National Mission for Education என்ற அமைப்புக்கு வழங்கி உள்ளனர். அந்த கணினிகளை IIT, REC, BITS களில் பயிலும் மாணவர்கள் உபயோகப்படுத்தி கொண்டு உள்ளனர். இப்பொழுது Datawind நிறுவனத்தினர் இந்த Tablet கணினிகளை பொது மக்களின் பயன்பாட்டிற்கு வெளியிட உள்ளனர். இதன் விலை Rs 3,000 என நிரனயிதுள்ளனர். இதனுடன் Rs. 400 மதிப்புள்ள கீபோர்ட் ஒன்றும் வழங்குகின்றனர். ஆக மொத்த விலை Rs. 3,400 ஆகும். இதன் சிறப்பம்சங்களும் ஆன்லைனில் எப்படி முன்பதிவு செய்வது என்றும் கீழே காணலாம்.




மேலும் வாசிக்க

Sunday, November 20, 2011

uTorrent மென்பொருள் புதிய பதிப்பு டவுன்லோட் செய்ய

நாம் இணையத்தில் இருந்து மென்பொருட்களையோ அல்லது சினிமா படங்கள் போன்ற பெரிய பைல்களை டவுன்லோட் செய்யும் போது அவைகளை டோரென்ட் பைல்களாக டவுன்லோட் செய்வோம். டோரென்ட் பைல்களில் இருந்து நம் கணினியில் நேரடியாக டவுன்லோட் செய்ய முடியாது. அதற்க்கு பெரும்பாலானவர்கள்  இந்த U Torrent மென்பொருளை பயன் படுத்துகிறார்கள். இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமான மென்பொருளாகும். தற்போது இந்த மென்பொருளின் உள்ள வசதிகளை மேம்படுத்தி புதிய பதிப்பாக 3.0(build 26473) இந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

மேலும் வாசிக்க

Saturday, November 19, 2011

பேஸ்புக் தளத்தை அதிகமாக யார்/எப்படி உபயோகிக்கிறார்கள்? [Infographic]

பேஸ்புக் மிகப்பெரிய சமூக இணையதளம். சுமார் 700 மில்லியன் பயனர்களை கொண்ட ஒரே மிகப்பெரிய தளம் பேஸ்புக். இணையத்தில் சமூக தளங்கள் உபயோகிப்பவர்களில் 57% பேர் பேஸ்புக் தளத்தை தான் உபயோகிக்கிறார்கள். இதற்கடுத்த நிலையில் ட்விட்டர்(37%), Linkedin(6%), Myspace(1%) போன்ற தளங்கள் உள்ளன. இந்த பேஸ்புக் தளத்தை யார் அதிகமாக உபயோகிக்கிறார்கள் எப்படி உபயோகப் படுத்துகிறார்கள் என்ற தகவல்களை கீழே பார்ப்போம். இந்த தகவல்களை JESS3 உருவாக்கி உள்ளது.

மேலும் வாசிக்க

Friday, November 18, 2011

2011 ஆண்டின் உலகிலன் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள் - 25 Worst passwords of 2011

இணையத்தில் ஒரு செய்தியையோ அல்லது ஒரு கணக்கையோ பாதுகாக்க அவற்றுக்கென ஒரு பாஸ்வேர்ட் உருவாக்கி அதன் மூலம் பாதுகாத்து இருப்போம். ஆனால் வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில் உள்ள பல்வேறு வசதிகள் மூலம் சிலர் அந்த பாஸ்வேர்ட்களை திருடி மற்றவரின் ரகசியங்களை தெரிந்து கொள்வதோடு மட்டுமின்றி அந்த கணக்கையும் முடக்கி விடுகின்றன. இந்த செயலை தான் ஹாக்கிங் என அழைக்கிறோம். இந்த செயலினால் மிகப்பெரிய தளங்கள் கூட பாதிக்கப் படுவதை நாம் அறிவோம். ஆதலால் நம்முடைய பாஸ்வேர்ட் மற்றவர்கள் அறிய முடியாதபடி மிகவும் கடினமாக அமைக்கின்றோம். உங்கள் பாஸ்வேர்ட் Letters,numbers,special character ஆகிய அனைத்தும் அடங்கி இருக்க வேண்டும்.

மேலும் வாசிக்க

முன்பணம் செலுத்தாமல் கூகுளின் புதிய Galaxy Nexus Phone ஆன்லைனில் முன்பதிவு செய்ய

நாளுக்கு நாள் புதுப் புது மொபைல் போன்கள் சந்தையில் வந்து கொண்டு இருக்கின்றன. கையடக்க கணினி என அழைக்க படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் வசதியிலும்,விற்பனையிலும் சிறந்து விளங்குகிறது. ஆப்பிளுக்கு பரம போட்டியாளரான கூகுள் சும்மா இருக்குமா என்ன அதுவும் ஆப்பிளுக்கு போட்டியாக Android எனப்படும் புதிய இயங்குதளத்தை உருவாக்கி போட்டியில் இறங்கி உள்ளது. இப்பொழுது இந்திய மார்க்கெட்டில் ஆப்பிள் போன்களை விட android வகை போன்கள் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. கூகுள் நிறுவனம் மேலும் போட்டியை வலுப்படுத்த புதிதாக சாம்சங் மொபைல் நிறுவனத்துடன் இணைந்து Google Nexus என்ற புதிய வகை போன்களை கூடிய விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதில் பல்வேறு வசதிகள் அடங்கி உள்ளது. அதற்க்கான ஆன்லைன் புக்கிங் சேவையை கூகுள் இந்தியா நிறுவனம் தற்பொழுது தொடங்கி உள்ளது. 





மேலும் வாசிக்க

Thursday, November 17, 2011

பிளாக்கரில் புதிய வசதி - Open this link in a new window

இந்த பிளாக்கர் பல புதிய வசதிகளை அடிக்கடி வாசகர்களுக்கு அளிப்பார்கள். அந்த வரிசையில் இப்பொழுது வந்திருக்கும் புதிய வசதி Open this link in new tab வசதி. இந்த வசதி என்ன அதை எப்படி உபயோகப்படுத்துவது எப்படி என கீழே பார்ப்போம். நாம் பதிவில் வாசகர்களுக்கு ஏதேனும் தகவல்களோ அல்லது தரவிறக்கம் செய்யவோ மற்ற தளத்தின் லிங்க் கொடுத்து இருப்போம். அல்லது உங்களுடைய முந்தைய பதிவின் லிங்கை இந்த பதிவில் கொடுத்து இருப்பீர்கள். வாசகர்கள் அந்த லிங்கை கிளிக் செய்தால் அது வேறொரு விண்டோவில் ஓபன் ஆபாமல் அந்த பதிவிலேயே ஓபன் ஆவதால் இருக்கிற பதிவு மறைந்து விடும். வாசகர்கள் திரும்பவும் புதிய விண்டோவை திறந்து உங்களின் பதிவுக்கு வருவார்கள் அல்லது வராமலே சென்று விடுவார்கள்.

மேலும் வாசிக்க

Wednesday, November 16, 2011

பேஸ்புக் அக்கௌன்ட்டை தற்காலிகமாக செயலிழக்க(Deactivate) வைப்பது எப்படி?

பேஸ்புக் மிகப்பிரபலமான சமூக இணையதளம். இணையத்தில் அனைவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு பிடித்த சமூக இணையதளம் என்றால் அது பேஸ்புக்காக தான் இருக்கும். ஒரு சில நேரத்தில் உங்களுடைய பேஸ்புக் கணக்கை செயலிழக்க செய்ய நீங்கள் நினைக்கலாம் இதற்க்கு பல்வேறு காரணங்கள் உள்ளது முக்கியமாக உங்கள் கணக்கை யாராவது ஹாக் செய்தாலோ, இந்த தளதினால் நேரம் வீணாக செலவாகிறது என நினைக்கலாம், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட அக்கௌன்ட் வைத்திருப்பதால் ஒன்றை செயலிழக்க வைக்க நினைக்கலாம் இப்படி பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். ஆதலால் இப்பதிவில் பேஸ்புக் கணக்கை எப்படி செயலிழக்க வைப்பது என பார்ப்போம்.



மேலும் வாசிக்க

Tuesday, November 15, 2011

20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtube ல் நேரடியாக அப்லோட் செய்ய

கூகுள் வழங்கு சிறந்த சேவைகளில் ஒன்று யூடியுப் தளம். இணையத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களை அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய தளமாகும். இந்த தளத்தில் நம்முடைய வீடியோக்களையும் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. சாதாரணமாக யூடியுப் தளத்தில் சுமார் 15 நிமிட வீடியோவை தான் அப்லோட் செய்யும் வசதி உள்ளது. இதனால் பெரிய வீடியோ பைல்களை அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ஆனால் யூடியுப் தளத்தில் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ பைல்களையும் அப்லோட் செய்யும் வசதி மறைந்து உள்ளது. அதனை எப்படி ஆக்டிவேட் செய்வது என கீழே பார்ப்போம்.

மேலும் வாசிக்க

மென்பொருட்களின் பழைய பதிப்பை(Old Versions) டவுன்லோட் செய்ய சிறந்த 6 தளங்கள்

கணினியில் நாம் பல்வேறு வகையான மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கிறோம். தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மென்பொருள் நிறுவனங்களும் அவர்களுடைய மென்பொருளை புதிய வசதிகளையும், மாற்றங்களையும் புகுத்தி புதிய பதிப்புகளாக வெளியிடுகின்றன. ஒரு சில புதிய பதிப்பு மென்பொருட்களில் வசதிகள் நிறைய இருந்தாலும் உபயோகிப்பதில் சில சிரமங்கள் ஏற்ப்படும் (திறக்க அதிக நேரம் எடுத்து கொள்ளுதல், சில வசதிகள் நீக்கி இருத்தல்). புதிய வசதிகள் பெறலாம் என்று பழைய பதிப்பை அழித்து புதிய பதிப்புகளுக்கு மாறும் பயனாளிகளுக்கு ஏமாற்றங்கள்(உள்ளதும் போச்சே) தான் மிஞ்சும்.

மேலும் வாசிக்க

Monday, November 14, 2011

McAfee Anti Virus Plus 2012 மென்பொருள் இலவசமாக டவுன்லோட் செய்ய [6 Months]

இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது.எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ, அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணினியில் புகுந்து நம் கணினியில் புகுந்து நாம் கணினியில் வைத்திருக்கும் டேட்டாக்களை முடக்கி கடைசியில் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது. இந்த வைரஸ்களை அழிக்க பல ஆன்ட்டி வைரஸ்களை உபயோகிக்கிறோம். அந்த முறையில் கணினியில் உள்ள வைரஸ்களை அளிப்பதில் McAfee  Anti virus Plus 2012 என்ற மென்பொருளும் சிறந்து விளங்குகிறது. 
மேலும் வாசிக்க

Sunday, November 13, 2011

உங்களின் வலைப்பூ வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டறிய-how to find your blog affected by viruses?

தொழில் நுட்ப வளர்ச்சியில் எங்கோ போய்கொண்டிருக்கும் உலகத்தில் பல்வேறு பயன்களும் புதிய தொழில்நுட்பங்களும் நமக்கு கிடைத்தாலும் இதற்க்கு எதிர்மறையான பிரச்சினைகளையும் நாம் தினமும் சந்திக்க வேண்டி உள்ளது. இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் மற்றும் மால்வேர்கள் எனப்படும் தீங்கிழைக்கும் மென்பொருட்கள். இந்த வைரஸ் பிரச்சினை இணையதளங்களுக்கும் ஆபத்தை உண்டாக்குகின்றன. வைரஸ்களை பரப்பவே இணையத்தில் பல இணைய தளங்கள் உள்ளன. வைரஸ் பாதித்த தளங்களில் இருந்து ஏதேனும் விட்ஜெட்டையோ அல்லது அந்த தளத்தின் லிங்கோ உங்களின் பிளாக்கில் கொடுத்து இருந்தால் உங்களுடைய தளத்திற்கும் அந்த வைரஸ் பரவிவிடும். இந்த வைரசினால் பெரிய தளங்கள் கூட பாதிப்பை அடைந்து இருக்கின்றனர்.

மேலும் வாசிக்க

Saturday, November 12, 2011

இன்டர்நெட் இல்லாமல் பேஸ்புக்கை SMS மூலம் உபயோகிக்க

வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் எல்லாமே சுலபமாகி விட்டது. பிரபல சமூக தளமான பேஸ்புக் தளத்தில் பல எண்ணற்ற வசதிகள் கொடுத்துள்ளனர். அதில் ஒரு முக்கியமான வசதியாக கணினி இல்லாமல் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் மொபைல் SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிப்பது எப்படி என இங்கு பார்க்க போகிறோம். நாம் முந்தைய பதிவில் ட்விட்டரை எப்படிSMS மூலம் உபயோகிப்பது என பார்த்தோம் இன்று பேஸ்புக்கை SMS மூலம் உபயோகிப்பது எப்படி என பார்க்க போகிறோம்.



இதற்க்கு முதலில் உங்கள் மொபைல் எண்ணை பேஸ்புக்கில் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் ஏற்க்கனவே பதிவு செய்திருந்தால் எப்படி உபயோகிப்பது என கீழே பாருங்கள். பதிவு செய்யாதவர்கள் தொடருங்கள்.

மேலும் வாசிக்க

Friday, November 11, 2011

Doodle4Google Winner- நொய்டாவை சேர்ந்த 7 வயது சிறுமி சாதனை

உலகின் மிக பிரபலமான கூகுல் நிறுவனம் இந்திய பள்ளி மாணவர்களின் கலைத்திறனை அதிகரிக்கவும், குழந்தைகளின் திறமையை வெளிக்கொணரவும் Google4 Doodle என்ற போட்டியை ஏற்பாடு செய்து நடத்தியது.இந்த போட்டியின் படி மாணவர்கள் அவர்களின் கற்பனையில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை Google லோகோவாக வரைந்து அனுப்ப வேண்டும். இதில் 1 முதல் 10 வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி கொடுத்தது கூகுள் நிறுவனம். இதில் ஆச்சரியம் என்ன வென்றால் கூகுள் நிறுவனமே எதிர்பார்க்காத வண்ணம் 1,55,000 பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

மேலும் வாசிக்க

VLC Media Player-ஐ உபயோகிக்க மவுஸ் தேவையில்லை

Video Lan நிறுவனத்தார் வழங்கும் VLC மீடியா ப்ளேயர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மென்பொருள். இந்த VLC மீடியா ப்ளேயரில் ஏராளமான வசதிகள் உள்ளது. சில வசதிகள் அதில் மறைந்து உள்ளது பெரும்பாலானவர்கள் இதனை உபயோகிப்பதில்லை(VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்). அந்த வரிசையில் மவுஸ் இல்லாமல் VLC மீடியா பிளேயரை உபயோகிக்க ஏராளமான short cut Keys உள்ளது. மவுசில் செய்யும் அனைத்து வசதிகளையும் கீபோர்ட் மூலமாகவே செய்யலாம்(ஒரு சில தவிர). அப்படி கீபோர்ட் மூலமாக எப்படி VLC Media Player உபயோகிப்பது என கீழே கொடுத்துள்ள கீகளும் அதன் செயல்பாட்டினையும் பாருங்கள்.

மேலும் வாசிக்க

Thursday, November 10, 2011

பீட்பர்னரில் Activation Link ஈமெயில் செய்தியை தமிழில் மாற்ற [ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க-2]

வலைப்பூ வைத்திருக்கும் பெரும்பாலானவர்களுக்கு feedburner பற்றி தெரிந்திருக்கும். Feed burner என்பது நம்முடைய புதிய பதிவுகளை வாசகர்களின் ஈமெயிலுக்கு இலவசமாக அனுப்பும் சேவையை வழங்கும் ஒரு நிறுவனமாகும். இந்த தளம் கூகுளால் இயக்கப்படுகிறது. இந்த தளத்தில் நாம் நம்முடைய வலைப்போவை இணைத்து விட்டால் நமக்கு ஒரு Email Subscription விட்ஜெட்டை அளிப்பார்கள் அந்த விட்ஜெட்டின் மூலம் வாசகர்கள் தங்கள் ஈமெயில் ஐடியை கொடுத்து Subscribe செய்வதன் மூலம் அவர்களின் மெயிலுக்கு நம்முடைய பதிவுகள் செல்லும். வாசகர்கள் இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய இரு வேறு செயல்களை செய்ய வேண்டும். முதலில் பிளாக்கில் உள்ள விட்ஜெட்டில் அவர்களின் ஈமெயில் ஐடியை கொடுத்து இணைய வேண்டும். உடனே அவர்களுக்கு ஒரு Activation Link உடன் கூடிய ஒரு மெயில் செல்லும் அந்த லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்தால் தான் இந்த வசதியை வாசகர்கள் பெறமுடியும்.
மேலும் வாசிக்க

Total Pageviews

Followers

Pages

Popular Posts

Labels

100 facts about sachin (1) 150 Rupee Coin (1) 2011 cricket world cup schedule (1) 2011 oscar awards winner list (1) 2011 oscar nominees (1) Aadhar Card (1) About Me (1) Agaram foundation (1) Alexa Rank (1) Android (13) Angry Birds (3) Animated facebook like box (1) animation in status (1) Anna Hazare (3) Anonymous SMS (2) Anti corruption (1) Anti virus (11) Apple (5) Apps And Update (2) ascii symbols (1) at a glance (1) AVG (1) Big Rock (1) Blocked Websites (1) Blogger Tricks (18) Blogger widget (9) Browser (4) Capgemini 2011 offcampus (1) Ccleaner (6) Celebrities (3) cell phone radiation protection (2) change facebook status (1) change facebook status from firefox (1) China mobiles (2) Content theft (2) Cool Ascii Art Graphics (1) cool symbols for facebook status update (1) copycat (1) Cricket World Cup 2011 (48) customize your facebook profile (3) Deactivate (2) digsby (1) display facebook status on wordpress blog (1) Diwali (2) domain names (2) Doodles (3) downfacebook (1) download facebook photo (2) download facebook photo album (1) download facebook video (1) Downloads (2) Earn money from Internet (6) Earthquake (1) election commission (1) Email Alert (1) Email Verifier (1) Eye test (1) face book (25) Face book games (2) facebbok sidebar gadget (1) facebok chat tricks (1) facebok status update (1) facebook (39) facebook ads cleaner (1) facebook ads remover (1) facebook air application (1) facebook album downloader (1) facebook animation (1) facebook ascii art (1) facebook ascii picture (1) facebook chat (2) facebook chat emoticons (1) facebook chat hide (1) facebook chat on desktop (1) facebook chat on firefox sidebar (1) facebook chat secrets (1) facebook cheats (1) facebook cleaner (1) facebook display selected friends picture (1) facebook emoticons (1) facebook facts (2) facebook hacks (1) facebook image downloader (1) Facebook Jobs (1) facebook message tricks (1) facebook messages schedule (1) Facebook Networked Bogs (7) facebook on your desktop (1) FACEBOOK PLUGINS (3) facebook privacy terms (1) facebook profile customize (1) facebook search (1) facebook search like a pro (1) facebook search tricks (1) facebook secrets reveal (2) facebook status (4) facebook status ideas (1) facebook status share on wordpress (1) facebook status statics (1) facebook status tag (1) facebook status tips (1) facebook status tricks (1) facebook status update (2) facebook status upside down (1) facebook tricks (66) facebooker (1) Fake Wall Message (1) Favicon (1) fb facts (2) feedburner (4) fier status (1) File opener (1) firefox4.0 (6) flicker to facebook uploader (1) flickr to facebook (1) Fonts (2) free (1) Free PC games (7) Free serial numbers (1) Free Software (89) Free Wallpapers (2) free website (1) free websites (3) friend request check (1) G-mail (31) gabtastik (1) Giveaways (2) Gmail (6) Google (6) Google Chrome (3) Google Chrome plugin (19) Google Doodle (1) google Flights (1) Google Image (2) google Indic Translate (1) Google Pack (1) google page rank (1) Google Plus (1) google plus games (1) Google Reader Tips (1) google Takout (1) GOOGLE TIPS (85) google vs facebook (3) google vs virus (1) Google+ (21) Google+ vs facebook (1) Greetings (1) hacked (1) hellotxt (1) help children (1) help kids (1) hide facebook ads (1) hide vote button (1) hollywood movies (1) How To (10) icon finder (1) india (2) India fight with Google (1) India Pincode (1) Indian Railway ticket booking (1) indli (1) Infographic (5) Interesting Facts (1) Internet (14) Internet Speed (2) IP Address (1) Iphone 4 (1) irctc (1) J Studios Title Video (1) Jegan Studios (1) Jobs (1) joke (1) Latest Version (1) launched in india (1) lokpal (1) Mac (1) Make Money Online via Blogger (11) mark zuckerberg (1) Media Player (2) Meditation தியானம் (1) Microsoft (1) microsoft vs google (1) Microsofts (2) Mobile (15) Mobile Softwares (8) Mobiles (6) mp3 Cutter (1) Muammar Gaddafi (1) new feature (5) NEWS (2) NHM Converter (1) old Versions (1) Online Antivirus (5) Online game (1) Online Petition Filing (1) online tools (9) Online train tickets (1) Opera (1) oscar award winners (1) Pandalgudi (1) Password generator (2) PC Games (3) PDF Tips (1) Pendrive Tips (3) Photoshop (3) ping.fm (1) politics (2) popular websites (2) Portable Apps (1) proud indian (1) ps And Update (1) ra-one (1) rajni (2) raone (1) remove facebook ads (1) Review (13) robot (1) Sachin (1) Sachin Ramesh Tendulkar (1) schedule facebook status update (1) scrapboy (1) screen shot (2) Search engine tricks (13) searchengine (1) seesmic desktop (1) sendible (1) SEO TIPS (5) Shortcut Keys (2) SMS (3) social media (9) Social Networks Tips (7) Software (5) Specification (8) speedbit (1) srk (1) suriya agaram (1) System Info (1) Tablet (1) Tamil Bloggers (1) tamil cinema (1) Tamil ebook free download (3) tamil movie online (3) Tamil unicode writer (1) Tamilnadu Official Websites (2) temples 360` view (1) Tendulkar (1) Thanks to Visitors (1) timeline (1) top blogs (3) Top10 (5) torrent Download (3) touching (1) twitter tips (7) u torrent (3) UID Card (1) upload (1) vaidvelu (1) Video Downloader (1) videos (2) vijay (1) Virtual wifi (1) virus (1) VLC (8) voter list (1) wallpaper (4) watermark (1) Web Browsers (8) Web Tips (70) webhosting (2) Wikipedia (1) Windows (4) windows 7 to wifi spot (1) Windows 8 (1) Windows Tips (3) windows vs apple (1) winners 2011 oscar (1) WordPress (1) world cup 2011 (49) world cup 2011 cricket match (49) World cup cricket match 2011 schedule (1) World Leaders (1) World Population (1) Writer Sujatha ebooks (1) xobni (1) yahoo (1) yogan (1) youropenbook.org (1) Youtube (14) Youtube.Google (1) தொழில்நுட்பம் (2) பிளாக்கர் (106) புதிய கண்டுபிடிப்புகள் (1)
Powered by Blogger.

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Counter

Design by araba-cı | MoneyGenerator Blogger Template by GosuBlogger