Itz My Website!

Blog Archive

Showing posts with label Blogger Tricks. Show all posts
Showing posts with label Blogger Tricks. Show all posts

Monday, December 12, 2011

பதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்

இணையதளங்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து கொண்டு உள்ளது. இலவச பிளாக்கர் தளங்களில் இருந்து அடுத்த கட்டமாக தங்கள் வலைப்பூக்களுக்கு தனி டொமைன் பெயரை வாங்கி உபயோகிக்கும் எண்ணம் பலரிடம் வந்துள்ளது. தங்கள் கருத்துகளையும் சமூக அவலங்களையும் பதிவர்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் அழகாக முன்னெடுத்து வைக்கின்றனர். பதிவர்கள் பதிவு எழுதி முடிந்ததும் தங்கள் பப்ளிஷ் செய்வதற்கு முன் பல விஷயங்கள் உங்கள் பதிவில் சரியாக இருக்கிறதா என சோதிக்க வேண்டும். அப்படி சோதிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்று இங்கு காண்போம்.



1. பதிவை டைப் செய்த பிறகு மீண்டும் வாசித்தீர்களா?
நம்முடைய எல்லோருக்கும் நேரம் என்பது பெரிய பிரச்சினையா உள்ளது. நமக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் அவசரமாக பதிவு எழுதினாலும், நாம் பதிவு எழுதி முடித்தவுடன் மீண்டும் முதலில் இருந்து வாசிக்க வேண்டும். அவசரத்தில் ஏதேனும் வரியை விட்டிருக்கலாம், அல்லது ஒரே வரியை இரண்டு முறை முறை டைப் செய்து இருக்கலாம், ஏதேனும் ஒரு இடத்தில் வாக்கியங்கள் மாறுபட்டுட்டு இருக்கலாம், அல்லது ஏதேனும் பத்தியை முடிக்காமல் அடுத்த பத்திக்கு தாவி இருக்கலாம் இது போன்ற பிழைகளை கண்டறிய பதிவை முடித்த பின் ஒரு முறை படிப்பது சிறந்தது. 


2.பதிவிற்கான படங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா?
ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஒரு பதிவில் நாம் கூற வரும் விஷயம் வாசகர்களிடையே எளிதாக சென்று சேர படங்கள் என்பது இன்றியமையாத ஒன்று. அல்லது பதவில் நகைச்சுவைக்காகவும், வாசகர்களை கவரும் விதமாகவும் பல விட படங்களை பதிவில் இணைக்கிறோம். பதிவை டைப் செய்து முடித்தவுடன் அதற்க்கான படங்களை சேர்த்து விட்டோமா, சேர்த்துள்ள படங்கள் அனைத்தும் சரியான இடத்தில் உள்ளதா என சோதித்து கொள்வது நல்லது.


3) லிங்க் சரி பார்த்தல்:
ஒரு பதிவில் ஏதேனும் இணைய தளங்களுக்கு லிங்க் கொடுப்பதாக இருந்தாலோ அல்லது உங்களுடைய முந்தைய பதிவிற்கு லிங்க் கொடுப்பதாக இருந்தாலோ பதிவை முடித்த பின் லிங்க் கொடுத்து விட்டோமா என சோதித்து கொள்வது நல்லது. அது மட்டுமில்லாமல் நீங்கள் கொடுத்த லிங்க் சரியாக இயங்குகிறதா, கிளிக் செய்தால் சரியான இடத்திற்கு செல்கிறதா என சோதித்து கொள்ளவும்.  


4) பிழை சரிபார்த்தல்:
சமீபத்தில் இந்த எழுத்து பிழையால் பதிவுலகில் பெறும் பிரச்சினை ஆனதை அனைவரும் அறிவோம். பதிவில் எழுத்துப்பிழை ஏற்படுவது இயல்பு தான். எழுத்துப்பிழை இல்லாமல் எழுதுவது மிகவும் அரிது ஆனால் பதிவை முடித்தவுடன் மீண்டும் வாசிப்பதால் நாம் தவற விட்ட எழுத்துப்பிழைகளை கணிசமாக குறைக்க முடியும். எழுத்துப்பிழையை குறைத்தால் வாசகர்களுக்கும் நம் பதிவு சுலபமாக புரியும். முடிந்த அளவு எழுத்துப்பிழையை குறைத்து கொள்வது நல்லது.


5) PREVIEW பார்த்தல்:
பிளாக்கரில் PREVIEW என்ற ஒரு வசதி உள்ளது. Publish பட்டனுக்கு அருகிலேயே இந்த PREVIEW பட்டனையும் கொடுத்து இருப்பார்கள். அந்த PREVIEW பட்டனை கிளிக் செய்தால் உங்களுடைய பதிவு பப்ளிஷ் செய்யப்பட்ட பிறகு வலைப்பூவில் எப்படி தெரியும் என முன் கூட்டியே பார்த்து கொள்ளலாம்.  பதிவர்கள் பப்ளிஷ் செய்வதற்கு முன் இந்த வசதியை கண்டிப்பாக பார்க்க வேண்டும். 


6) தலைப்பு சரிபார்த்தல்:
பதிவு மட்டுமல்ல எல்லாத்துக்குமே தலைப்பு ரொம்ப முக்கியம். ஒரு பதிவின் தலைப்பு என்பது பதிவிற்கு சம்பந்தமாகவும் அதே சமயம் வாசகர்களை கவரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். பதிவின் தலைப்பை முடிந்த அளவு சிறியதாக வைக்க வேண்டும் ஆனால் பதிவின் பொருள் மாறிவிடக்கூடாது. பதிவிற்கு சம்பந்தமாக தலைப்பு வைப்பதால் தேடியந்திரங்கள் மூலம் வரும் வாசகர்களுக்கு சரியான பதிவை அடையாளம் கண்டறிந்து வர உதவும்.


7) ஹிட்ஸ் கிடைக்க ஏற்ற நேரமா என சோதித்தல்:
தரமான பதிவுகள் எந்த நேரத்தில் வெளியிட்டாலும் அதிக வாசகர்களை கவரும் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். ஒரு பதிவர் தான் வெளியிடும் பதிவு பெரும்பாலான வாசகர்களுக்கு சென்று சேர வேண்டும் என நினைப்பார். நிறைய பேருக்கு போய் சேர வேண்டும் என மனதில் நினைத்து கொண்டு இரவு 12 மணிக்கு(பேய் வரும் நேரத்தில்) பதிவு போட்டால் யார் படிப்பார்கள். காலைக்குள் உங்கள் பதிவுகள் திரட்டிகளில் பின்னுக்கு தள்ளப்பட்டு விடும். ஆகையால் பதிவை வெளியிடும் பொழுது தக்க நேரத்தில் வெளியிடவும். 


8) Schedule போஸ்ட் என்றால்:
உங்களுடைய பதிவை Schedule செய்து குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே பப்ளிஷ் ஆகும் படி வைக்க எண்ணினால் பப்ளிஷ் செய்வதற்கு முன் நேரத்தை தேர்வு செய்து விட்டீர்களா என சோதித்து கொள்ளவும். நேரத்தை தேர்வு செய்யாமல் பப்ளிஷ் பட்டனை அழுத்தினால் எப்பொழுதும் போல பப்ளிஷ் ஆகிவிடும். ஆகையால் பதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன் இதை சோதித்து கொள்வது நல்லது. 


ஒவ்வொரு பதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன்னரும் இந்த விஷயங்களை சரிபார்த்து பிறகு பப்ளிஷ் செய்யவும். 







முல்லை பெரியாறு பிரச்சினை இணையத்தில் உங்கள் ஆதரவை தெரிவிக்க:

நண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.





நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.



பதிவர் நண்பர்களே இந்த செய்தியை உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டு பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நம் சமூகத்தை காக்க உதவுங்கள்.

Monday, December 5, 2011

Bigrock டொமைனை பிளாக்கரில் செயல்படுத்துவது எப்படி [முழு விளக்கம் படங்களுடன்]

நாளுக்கு நாள் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை கூடிகொண்டே உள்ளது. புதிய பதிவர்கள் புற்றீசல் போல உருவாகி கொண்டே உள்ளது. வலை பதிவர்கள் அடுத்த கட்டமாக அவர்களின் வலைப்பூக்களை சொந்த டொமைனுக்கு மாற்ற விரும்புகின்றனர். பிளாக்கர் மூலம் டொமைன் வாங்க வேண்டுமென்றால் கிரெடிட் கார்ட் அவசியமாகிறது. இதனால் debit card, net banking, offline payment போன்ற வசதிகளை வழங்கும் Bigrock தளத்தை நாடி செல்கின்றனர். கூகுளில் டொமைன் வாங்கினால் நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை தானாகவே Re-direct ஆகிவிடும். ஆனால் Bigrock தளம் மூலம் டொமைன் வாங்கினால் பழைய தளத்திலிருந்து நாம் தான் புதிய தளத்திற்கு Redirect செய்ய வேண்டும். அதை எப்படி செய்வது என பார்ப்போம்.

மேலும் வாசிக்க

Saturday, November 26, 2011

பிளாக்கர் பதிவில் Blogger Poll வசதியை இணைப்பது எப்படி?

பிளாக்கரில் பல எண்ணற்ற வசதிகள் உள்ளது. அந்த வசதிகளில் ஒன்று தான் Blogger Poll வசதி. இந்த வசதியின் மூலம் நம் பிளாக்கிற்கு வரும் வாசகர்களிடம் கருத்து கேட்க சிறிய ஓட்டெடுப்பு நடத்த எதுவாக உள்ளது. ஆனால் இந்த வசதியை நாம் பிலாக்கரின் சைட்பாரில் மட்டுமே பயன்படுத்த முடியும். பிளாக்கர் பதிவில் இந்த வசதியை நேரடியாக இணைக்க முடியாது. நம் பதிவில் வாசகர்களிடம் கருத்து கேட்க வேண்டுமானால் poll வசதிக்காக மற்ற தளங்களின் உதவியை நாட வேண்டி உள்ளது. அந்த தளங்களில் உறுப்பினர் ஆகி பிறகு இந்த பிளாக்கர் பதிவில் விட்ஜெட்டை சேர்க்க வேண்டும். ஆனால் இப்பொழுது சிறிய ட்ரிக்ஸ் பயன்படுத்தினாலே போதும் நேரடியாக Blogger Poll வசதியை நம்முடைய பதிவுகளில் இணைத்து விடலாம்.
மேலும் வாசிக்க

Thursday, November 17, 2011

பிளாக்கரில் புதிய வசதி - Open this link in a new window

இந்த பிளாக்கர் பல புதிய வசதிகளை அடிக்கடி வாசகர்களுக்கு அளிப்பார்கள். அந்த வரிசையில் இப்பொழுது வந்திருக்கும் புதிய வசதி Open this link in new tab வசதி. இந்த வசதி என்ன அதை எப்படி உபயோகப்படுத்துவது எப்படி என கீழே பார்ப்போம். நாம் பதிவில் வாசகர்களுக்கு ஏதேனும் தகவல்களோ அல்லது தரவிறக்கம் செய்யவோ மற்ற தளத்தின் லிங்க் கொடுத்து இருப்போம். அல்லது உங்களுடைய முந்தைய பதிவின் லிங்கை இந்த பதிவில் கொடுத்து இருப்பீர்கள். வாசகர்கள் அந்த லிங்கை கிளிக் செய்தால் அது வேறொரு விண்டோவில் ஓபன் ஆபாமல் அந்த பதிவிலேயே ஓபன் ஆவதால் இருக்கிற பதிவு மறைந்து விடும். வாசகர்கள் திரும்பவும் புதிய விண்டோவை திறந்து உங்களின் பதிவுக்கு வருவார்கள் அல்லது வராமலே சென்று விடுவார்கள்.

மேலும் வாசிக்க

Sunday, November 13, 2011

உங்களின் வலைப்பூ வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டறிய-how to find your blog affected by viruses?

தொழில் நுட்ப வளர்ச்சியில் எங்கோ போய்கொண்டிருக்கும் உலகத்தில் பல்வேறு பயன்களும் புதிய தொழில்நுட்பங்களும் நமக்கு கிடைத்தாலும் இதற்க்கு எதிர்மறையான பிரச்சினைகளையும் நாம் தினமும் சந்திக்க வேண்டி உள்ளது. இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் மற்றும் மால்வேர்கள் எனப்படும் தீங்கிழைக்கும் மென்பொருட்கள். இந்த வைரஸ் பிரச்சினை இணையதளங்களுக்கும் ஆபத்தை உண்டாக்குகின்றன. வைரஸ்களை பரப்பவே இணையத்தில் பல இணைய தளங்கள் உள்ளன. வைரஸ் பாதித்த தளங்களில் இருந்து ஏதேனும் விட்ஜெட்டையோ அல்லது அந்த தளத்தின் லிங்கோ உங்களின் பிளாக்கில் கொடுத்து இருந்தால் உங்களுடைய தளத்திற்கும் அந்த வைரஸ் பரவிவிடும். இந்த வைரசினால் பெரிய தளங்கள் கூட பாதிப்பை அடைந்து இருக்கின்றனர்.

மேலும் வாசிக்க

Thursday, November 10, 2011

பீட்பர்னரில் Activation Link ஈமெயில் செய்தியை தமிழில் மாற்ற [ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க-2]

வலைப்பூ வைத்திருக்கும் பெரும்பாலானவர்களுக்கு feedburner பற்றி தெரிந்திருக்கும். Feed burner என்பது நம்முடைய புதிய பதிவுகளை வாசகர்களின் ஈமெயிலுக்கு இலவசமாக அனுப்பும் சேவையை வழங்கும் ஒரு நிறுவனமாகும். இந்த தளம் கூகுளால் இயக்கப்படுகிறது. இந்த தளத்தில் நாம் நம்முடைய வலைப்போவை இணைத்து விட்டால் நமக்கு ஒரு Email Subscription விட்ஜெட்டை அளிப்பார்கள் அந்த விட்ஜெட்டின் மூலம் வாசகர்கள் தங்கள் ஈமெயில் ஐடியை கொடுத்து Subscribe செய்வதன் மூலம் அவர்களின் மெயிலுக்கு நம்முடைய பதிவுகள் செல்லும். வாசகர்கள் இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய இரு வேறு செயல்களை செய்ய வேண்டும். முதலில் பிளாக்கில் உள்ள விட்ஜெட்டில் அவர்களின் ஈமெயில் ஐடியை கொடுத்து இணைய வேண்டும். உடனே அவர்களுக்கு ஒரு Activation Link உடன் கூடிய ஒரு மெயில் செல்லும் அந்த லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்தால் தான் இந்த வசதியை வாசகர்கள் பெறமுடியும்.
மேலும் வாசிக்க

Thursday, October 27, 2011

பீட்பர்னரில் Feed URL எவ்வாறு மாற்றுவது? ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க

 வாசகர்களை அதிகரிக்க நாம் பல வகையான தொழில்நுட்பங்களை கையாள்கிறோம். அந்த வகையில் முக்கியமானது Email Subscribe வசதி. இந்த வசதியை Feedburner தளம் இலவசமாக வழங்குகிறது. இந்த தளத்தில் நம்முடைய பிளாக்கை இணைப்பதன் மூலம் நம் வாசகர்களுக்கு புதிய பதிவு போட்டவுடன் அந்த பதிவு ஈமெயிலில் சென்று விடும். இந்த feedburnerல் பிளாக்கை இணைக்கும் பொழுது நம் பிளாக்கிற்கு என்று ஒரு Feed முகவரியை பீட்பர்னர் தளம் உருவாக்கி தரும். அந்த Feed URL ல் தான் நம்முடைய பதிவுகள் அனைத்தும் அப்டேட் ஆகும். இதில் பீட்பர்னர் தளத்தால் தானாக உருவாக்கப்படும் முகவரி நாம் நினைத்தது போல இருக்காது.

மேலும் வாசிக்க

பிளாக்கரில் Google Plus Profile ஆக்டிவேட் செய்ய?

கூகுள் நிறுவனம் தற்பொழுது அதனுடைய இணையதளங்களில் பல மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பிளாக்கர் தளத்தில் உள்ள Default Profile மாற்றி Google Plus ப்ரோபைல் வைத்து கொள்ளும் வசதியை வாசகர்களுக்கு அளித்துள்ளது. தற்பொழுது அந்த வசதியை அனைருக்கும் தராமல் Draft பயனாளர்களுக்கு மட்டுமே அளித்துள்ளது. உங்கள் அக்கௌண்டில் அதை எப்படி ஆக்டிவேட் செய்வது என பார்க்கலாம். 
மேலும் வாசிக்க

Saturday, October 1, 2011

பிளாக்கில் உள்ள லிங்க்குகள்(Links) பல்வேறு நிறங்களில் ஜொலிக்க - Rainbow Effects

பிளாக்கர் பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் நம் பிளாக் அழகாக இருக்கவே ஆசை படுவோம். உங்களுடைய பிளாக்கில் பல்வேறு லிங்க்குகள் இருக்கும். Post title, Popular Post, Recent Post, etc.. இப்படி எல்லாமே லிங்க் ஆக தான் இருக்கும். அந்த லிங்கை கிளிக் செய்தால் தான் வாசகர்களால் முழு பதிவையும் படிக்க முடியும். அந்த லிங்க்குகள் ஒரே நிறத்தில் தான் அனைவரின் பிலாக்கிலும் காட்சி அளிக்கும். இப்பொழுது அந்த லிங்க்குகளை பல்வேறு நிறங்களில் ஜொலிக்க வைப்பது எப்படி என பார்க்கலாம்.



மேலும் வாசிக்க

Thursday, September 29, 2011

பிளாக்கரில் புதிய Popup Email Subscribe Widget இணைக்க

சில தளங்களில் நாம் பார்த்து இருப்போம் இந்த விட்ஜெட்டை நாம் அந்த தளத்திற்கு சென்றால் அந்த தளம் ஓபன் ஆகியவுடன் நமக்கு ஒரு இன்னொரு popup விண்டோ ஓபன் ஆகும் அதில் Email subscription விட்ஜெட் இணைக்கப் பட்டிருக்கும் அதில் சென்று அவர்கள் உறுப்பினர் ஆகி கொள்ளலாம். இதனால் உங்களுடைய ஈமெயில் வாசகர்களை கணிசமான முறையில் அதிகரித்து பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்கலாம். இது போன்று பிளாக்கர் வலைபூக்களில் எப்படி அந்த விட்ஜெட்டை வைப்பது என பார்ப்போம்.இந்த விட்ஜெட்டின் சிறப்பம்சமே புதிதாக உங்கள் பதிவுகளுக்கு வருபவர்களுக்கு தான் தெரியும். தொடர்ந்து படிப்பவர்களுக்கு வந்து தொந்தரவு செய்யாது.

மேலும் வாசிக்க

Friday, September 23, 2011

சுலபமாக பிளாக்கரின் Lightbox Image Effect வசதியை செயலிழக்க வைக்க

பிளாக்கர் தளத்தில் வெளியிட்ட வசதிகளிலேயே பெரும்பாலானவர்களால் விரும்பப்படாத வசதியாக இந்த Light Box Effect வசதி இருக்குமென நினைக்கிறேன். இந்த வசதி பிளாக்கில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட வசதி ஒவ்வொரு பதிவுக்கும் தனிதனி விண்டோ திறக்காமல் ஒரே விண்டோவில் பதிவின் அனைத்து படங்களும் தெரியும் படி உருவாக்கியது இந்த Light box Image Effect வசதி. ஆனால் இதில் பல்வேறு பிரச்சினை உள்ளதால் அனைவரும் இந்த வசதியை செயலிழக்க வைக்கின்றனர். அந்த வசதியை செயலிழக்க வைக்க நாம் கீழே ஒரு சுலபமான வழியை பார்ப்போம். இதற்க்கு நீங்கள் உங்கள் டெம்ப்ளேட் கோடிங் பகுதியில் எந்த கொடிங்கையும் சேர்க்க வேண்டாம்.

மேலும் வாசிக்க

Friday, September 16, 2011

பிரபல சமூக தளங்களின் Sharing Count Buttons ஒரே விட்ஜெட்டில் இணைக்க

பதிவுகளை பிரபல படுத்த நாம் பல முறைகளை கையாளுகிறோம். முக்கியமானது பதிவுகளை திரட்டிகளில் இணைப்பது இன்னொன்று சமூக இணைய தளங்களில் இணைப்பது. இந்த தளங்களின் ஓட்டு பட்டைகளை ஏற்க்கனவே பிளாக்கில் இணைத்து இருப்போம். ஆனால் அவைகளை தனித்தனியே இணைத்து இருப்போம் ஆதலால் அவை ஒழுங்கற்று இருக்கும். ஆகவே பிரபல சமூக தளங்களின் ஓட்டு பட்டன்களை எப்படி ஒரே விட்ஜெட்டில் வைப்பது என பார்ப்போம்.


மேலும் வாசிக்க

Thursday, September 8, 2011

பிளாக்கிற்கு ஏன் டொமைன் பெயர்(.com .net .org) வாங்க வேண்டும் அதன் அவசியம் என்ன?

பெரும்பாலான பதிவர்களிடம் உள்ள ஒரு கேள்வி நாம் ஏன் .com வாங்க வேண்டும் ஓசியில கிடைக்குறத விட்டுட்டு நாம் எதற்க்காக பணம் செலவழித்து டொமைன் வாங்க வேண்டும் அதை வாங்கினால் நமக்கு என்ன பயன் இப்படி பல்வேறு வகையான சந்தேகங்கள் அவர்களுக்கு உள்ளது. நாம் ஏன் .காம் வாங்க வேண்டும் என்று கீழே சில கருத்துக்களை பகிர்ந்துள்ளேன். அதை படித்து பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள் .காம் வாங்கலாமா இல்லை வேண்டாமா என்று.

மேலும் வாசிக்க

Sunday, September 4, 2011

பிளாக்கரில் Animated Popular Posts விட்ஜெட் இணைக்க

நம்முடைய பதிவுகளில் மிக சிறந்த பெரும்பாலானவர்களால் பார்க்க பட்ட பதிகளை Popular Posts என குறிப்பிடுகிறோம். அப்படி பிரபலமான இடுகைகளை வரிசைபடுத்தி கொடுப்பதே பிளாக்கரின் popular Posts விட்ஜெட் ஆகும். பிளாக்கர் தளம் இந்த விட்ஜெட்டை எந்த வித அனிமேட்டட் வசதியுமின்றி சிம்பிளாக வடிவமைத்துள்ளது. இப்பொழுது இந்த விட்ஜெட்டை அனிமேட்டட் வசதியுடன் பதிவுகள் நகர்ந்து செல்லும் படி எப்படி வடிவமைப்பது என காண்போம். இது போல மாற்றுவதனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எத்தனை பதிவுகளை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். தேவை இல்லாமல் இடத்தை அடைத்து கொள்ளாது. மற்றும் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.


மேலும் வாசிக்க

Thursday, September 1, 2011

பிளாக்கரின் புதிய தோற்றம் தற்பொழுது அனைவருக்கும் ஆக்டிவேட் செய்ய

பிளாக்கரின் புதிய தோற்றத்தை பற்றி ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வசதி இது நாள் வரை சோதனை ஓட்டமாக டிராப்ட் பயனாளிகளுக்கு மட்டும் கிடைத்து வந்தது. தற்போது அதில் உள்ள பிழைகள் களையப்பட்டு தற்போது இந்த வசதியை அனைவருக்கும் பொது சேவையாக வெளியிட்டு உள்ளனர். ஆதலால் டிராப்ட் பயனாளிகள் மட்டும் பெற்று வந்த இந்த வசதியை இனி அனைவரும் பெறலாம். நீங்கள் உங்கள் dashboard பகுதிக்கு சென்றாலே ஒரு புதிய அறிவிப்பு உங்களுக்கு காட்டப்படும்.





மேலும் வாசிக்க

Monday, August 29, 2011

உங்கள் பிளாக்கிற்கு FeedFlare வசதியை ஆக்டிவேட் செய்ய

நம்முடைய பிளாக் பதிவுகளை வாசகர்கள் ஈமெயில் பெற வசதியாக  பதிவுகளை feedburner அப்டேட் ஆகும் படி அமைத்து அதன் மூலமாக வாசகர்களுக்கு அனுப்புவோம். இதன் மூலம் நம் பதிவு பிடித்து இருந்தால் வாசகர்கள் நம் தளத்திற்கு வந்து பதிவை படித்து செல்வார்கள். அப்படி அனுப்பும் பொழுது ஈமெயில் வாசகர்களுக்கு மேலும் சில வசதிகளை வழங்குவது தான் இந்த Feedflare என்பதாகும். உங்களுடைய கணக்கிலும் இந்த வசதியை ஆக்டிவேட் செய்வதனால் மேலும் சில வசதிகளை ஈமெயில் வாசகர்கள் பெற முடியும்.  இந்த Feedflare வசதியை ஆக்டிவேட் செய்வதனால் வாசகர்கள் நம்முடைய பதிவுகளை சமூக தளங்களில் பகிரும் வசதியும் மற்றும் அவர்களுடைய நண்பர்களுக்கு நண்பர்களுக்கு பதிவை ஈமெயில் அனுப்பும் வசதி போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கலாம்.

மேலும் வாசிக்க

Wednesday, August 24, 2011

பிளாக்கரில் இருந்தே நேரடியாக கூகுள் பிளசில் பதிவை பகிரலாம்

நம்முடைய தளங்களில் கூகுளின் +1 பட்டனை வைத்திருப்போம். நம்முடைய தளங்களில் வரும் வாசகர்கள் பதிவு பிடித்திருந்தால் அந்த பட்டனில் ஓட்டு போட்டு ஆதரவினை தெரிவிப்பார்கள். இதுவரை இந்த பட்டன் ஓட்டு போட மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்பொழுது இதில் புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளனர். இந்த பட்டனில் இருந்தே கூகுள் பிளசில் பதிவை பகிரலாம். வாசகர்களும் அவர்களின் நண்பர்களுக்கு உங்கள் பதிவுகளை பகிர்வதன் மூலம் தங்களுடைய பதிவு நிறைய பேரை சென்றடையும்.

மேலும் வாசிக்க

Saturday, August 20, 2011

Link Within Related post விட்ஜெட்டை பிளாக்கரின் முகப்பு பக்கத்தில் தெரியாமல் மறைக்க

பிளாக்கர் பதிவுகளில் தொடர்புடைய இடுகைகளை காண்பிக்க பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது Link Within தளத்தின் விட்ஜெட்டை தான். இந்த விட்ஜெட்டில் சில பிரச்சினைகள் உள்ளது அனைத்து பதிவுகளுக்கு ஒரே மாத்ரியான பதிவுகளை காட்டும், பதிவுகளை அழித்த பிறகும் அந்த பதிவின் சுட்டியை காட்டி கொண்டிருக்கும் மற்றும் முகப்பு பக்கத்திலும் இந்த விட்ஜெட் தெரியும். முகப்பு பக்கத்தில் தெரிவதால் உங்கள் பிளாக்கின் தோற்றம் அழகற்று காணப்படும். பெரும்பாலான வாசகர்கள் இது போன்று தெரிவதை விரும்புவதில்லை. ஆதலால் முகப்பு பக்கத்தில் இந்த விட்ஜெட்டை மறைத்து போஸ்ட் பகுதியில் மட்டும் எப்படி தெரிய வைப்பது என பார்ப்போம்.



மேலும் வாசிக்க

Total Pageviews

Followers

Pages

Popular Posts

Labels

100 facts about sachin (1) 150 Rupee Coin (1) 2011 cricket world cup schedule (1) 2011 oscar awards winner list (1) 2011 oscar nominees (1) Aadhar Card (1) About Me (1) Agaram foundation (1) Alexa Rank (1) Android (13) Angry Birds (3) Animated facebook like box (1) animation in status (1) Anna Hazare (3) Anonymous SMS (2) Anti corruption (1) Anti virus (11) Apple (5) Apps And Update (2) ascii symbols (1) at a glance (1) AVG (1) Big Rock (1) Blocked Websites (1) Blogger Tricks (18) Blogger widget (9) Browser (4) Capgemini 2011 offcampus (1) Ccleaner (6) Celebrities (3) cell phone radiation protection (2) change facebook status (1) change facebook status from firefox (1) China mobiles (2) Content theft (2) Cool Ascii Art Graphics (1) cool symbols for facebook status update (1) copycat (1) Cricket World Cup 2011 (48) customize your facebook profile (3) Deactivate (2) digsby (1) display facebook status on wordpress blog (1) Diwali (2) domain names (2) Doodles (3) downfacebook (1) download facebook photo (2) download facebook photo album (1) download facebook video (1) Downloads (2) Earn money from Internet (6) Earthquake (1) election commission (1) Email Alert (1) Email Verifier (1) Eye test (1) face book (25) Face book games (2) facebbok sidebar gadget (1) facebok chat tricks (1) facebok status update (1) facebook (39) facebook ads cleaner (1) facebook ads remover (1) facebook air application (1) facebook album downloader (1) facebook animation (1) facebook ascii art (1) facebook ascii picture (1) facebook chat (2) facebook chat emoticons (1) facebook chat hide (1) facebook chat on desktop (1) facebook chat on firefox sidebar (1) facebook chat secrets (1) facebook cheats (1) facebook cleaner (1) facebook display selected friends picture (1) facebook emoticons (1) facebook facts (2) facebook hacks (1) facebook image downloader (1) Facebook Jobs (1) facebook message tricks (1) facebook messages schedule (1) Facebook Networked Bogs (7) facebook on your desktop (1) FACEBOOK PLUGINS (3) facebook privacy terms (1) facebook profile customize (1) facebook search (1) facebook search like a pro (1) facebook search tricks (1) facebook secrets reveal (2) facebook status (4) facebook status ideas (1) facebook status share on wordpress (1) facebook status statics (1) facebook status tag (1) facebook status tips (1) facebook status tricks (1) facebook status update (2) facebook status upside down (1) facebook tricks (66) facebooker (1) Fake Wall Message (1) Favicon (1) fb facts (2) feedburner (4) fier status (1) File opener (1) firefox4.0 (6) flicker to facebook uploader (1) flickr to facebook (1) Fonts (2) free (1) Free PC games (7) Free serial numbers (1) Free Software (89) Free Wallpapers (2) free website (1) free websites (3) friend request check (1) G-mail (31) gabtastik (1) Giveaways (2) Gmail (6) Google (6) Google Chrome (3) Google Chrome plugin (19) Google Doodle (1) google Flights (1) Google Image (2) google Indic Translate (1) Google Pack (1) google page rank (1) Google Plus (1) google plus games (1) Google Reader Tips (1) google Takout (1) GOOGLE TIPS (85) google vs facebook (3) google vs virus (1) Google+ (21) Google+ vs facebook (1) Greetings (1) hacked (1) hellotxt (1) help children (1) help kids (1) hide facebook ads (1) hide vote button (1) hollywood movies (1) How To (10) icon finder (1) india (2) India fight with Google (1) India Pincode (1) Indian Railway ticket booking (1) indli (1) Infographic (5) Interesting Facts (1) Internet (14) Internet Speed (2) IP Address (1) Iphone 4 (1) irctc (1) J Studios Title Video (1) Jegan Studios (1) Jobs (1) joke (1) Latest Version (1) launched in india (1) lokpal (1) Mac (1) Make Money Online via Blogger (11) mark zuckerberg (1) Media Player (2) Meditation தியானம் (1) Microsoft (1) microsoft vs google (1) Microsofts (2) Mobile (15) Mobile Softwares (8) Mobiles (6) mp3 Cutter (1) Muammar Gaddafi (1) new feature (5) NEWS (2) NHM Converter (1) old Versions (1) Online Antivirus (5) Online game (1) Online Petition Filing (1) online tools (9) Online train tickets (1) Opera (1) oscar award winners (1) Pandalgudi (1) Password generator (2) PC Games (3) PDF Tips (1) Pendrive Tips (3) Photoshop (3) ping.fm (1) politics (2) popular websites (2) Portable Apps (1) proud indian (1) ps And Update (1) ra-one (1) rajni (2) raone (1) remove facebook ads (1) Review (13) robot (1) Sachin (1) Sachin Ramesh Tendulkar (1) schedule facebook status update (1) scrapboy (1) screen shot (2) Search engine tricks (13) searchengine (1) seesmic desktop (1) sendible (1) SEO TIPS (5) Shortcut Keys (2) SMS (3) social media (9) Social Networks Tips (7) Software (5) Specification (8) speedbit (1) srk (1) suriya agaram (1) System Info (1) Tablet (1) Tamil Bloggers (1) tamil cinema (1) Tamil ebook free download (3) tamil movie online (3) Tamil unicode writer (1) Tamilnadu Official Websites (2) temples 360` view (1) Tendulkar (1) Thanks to Visitors (1) timeline (1) top blogs (3) Top10 (5) torrent Download (3) touching (1) twitter tips (7) u torrent (3) UID Card (1) upload (1) vaidvelu (1) Video Downloader (1) videos (2) vijay (1) Virtual wifi (1) virus (1) VLC (8) voter list (1) wallpaper (4) watermark (1) Web Browsers (8) Web Tips (70) webhosting (2) Wikipedia (1) Windows (4) windows 7 to wifi spot (1) Windows 8 (1) Windows Tips (3) windows vs apple (1) winners 2011 oscar (1) WordPress (1) world cup 2011 (49) world cup 2011 cricket match (49) World cup cricket match 2011 schedule (1) World Leaders (1) World Population (1) Writer Sujatha ebooks (1) xobni (1) yahoo (1) yogan (1) youropenbook.org (1) Youtube (14) Youtube.Google (1) தொழில்நுட்பம் (2) பிளாக்கர் (106) புதிய கண்டுபிடிப்புகள் (1)
Powered by Blogger.

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Counter

Design by araba-cı | MoneyGenerator Blogger Template by GosuBlogger