வலைப்பூ வைத்திருக்கும் பெரும்பாலானவர்களுக்கு feedburner பற்றி தெரிந்திருக்கும். Feed burner என்பது நம்முடைய புதிய பதிவுகளை வாசகர்களின் ஈமெயிலுக்கு இலவசமாக அனுப்பும் சேவையை வழங்கும் ஒரு நிறுவனமாகும். இந்த தளம் கூகுளால் இயக்கப்படுகிறது. இந்த தளத்தில் நாம் நம்முடைய வலைப்போவை இணைத்து விட்டால் நமக்கு ஒரு Email Subscription விட்ஜெட்டை அளிப்பார்கள் அந்த விட்ஜெட்டின் மூலம் வாசகர்கள் தங்கள் ஈமெயில் ஐடியை கொடுத்து Subscribe செய்வதன் மூலம் அவர்களின் மெயிலுக்கு நம்முடைய பதிவுகள் செல்லும். வாசகர்கள் இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய இரு வேறு செயல்களை செய்ய வேண்டும். முதலில் பிளாக்கில் உள்ள விட்ஜெட்டில் அவர்களின் ஈமெயில் ஐடியை கொடுத்து இணைய வேண்டும். உடனே அவர்களுக்கு ஒரு Activation Link உடன் கூடிய ஒரு மெயில் செல்லும் அந்த லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்தால் தான் இந்த வசதியை வாசகர்கள் பெறமுடியும்.
0 comments:
Post a Comment