நாளுக்கு நாள் புதுப் புது மொபைல் போன்கள் சந்தையில் வந்து கொண்டு இருக்கின்றன. கையடக்க கணினி என அழைக்க படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் வசதியிலும்,விற்பனையிலும் சிறந்து விளங்குகிறது. ஆப்பிளுக்கு பரம போட்டியாளரான கூகுள் சும்மா இருக்குமா என்ன அதுவும் ஆப்பிளுக்கு போட்டியாக Android எனப்படும் புதிய இயங்குதளத்தை உருவாக்கி போட்டியில் இறங்கி உள்ளது. இப்பொழுது இந்திய மார்க்கெட்டில் ஆப்பிள் போன்களை விட android வகை போன்கள் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. கூகுள் நிறுவனம் மேலும் போட்டியை வலுப்படுத்த புதிதாக சாம்சங் மொபைல் நிறுவனத்துடன் இணைந்து Google Nexus என்ற புதிய வகை போன்களை கூடிய விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதில் பல்வேறு வசதிகள் அடங்கி உள்ளது. அதற்க்கான ஆன்லைன் புக்கிங் சேவையை கூகுள் இந்தியா நிறுவனம் தற்பொழுது தொடங்கி உள்ளது.
மேலும் வாசிக்க
0 comments:
Post a Comment