இணையதளங்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து கொண்டு உள்ளது. இலவச பிளாக்கர் தளங்களில் இருந்து அடுத்த கட்டமாக தங்கள் வலைப்பூக்களுக்கு தனி டொமைன் பெயரை வாங்கி உபயோகிக்கும் எண்ணம் பலரிடம் வந்துள்ளது. தங்கள் கருத்துகளையும் சமூக அவலங்களையும் பதிவர்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் அழகாக முன்னெடுத்து வைக்கின்றனர். பதிவர்கள் பதிவு எழுதி முடிந்ததும் தங்கள் பப்ளிஷ் செய்வதற்கு முன் பல விஷயங்கள் உங்கள் பதிவில் சரியாக இருக்கிறதா என சோதிக்க வேண்டும். அப்படி சோதிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்று இங்கு காண்போம்.
ஒவ்வொரு பதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன்னரும் இந்த விஷயங்களை சரிபார்த்து பிறகு பப்ளிஷ் செய்யவும்.
முல்லை பெரியாறு பிரச்சினை இணையத்தில் உங்கள் ஆதரவை தெரிவிக்க:1. பதிவை டைப் செய்த பிறகு மீண்டும் வாசித்தீர்களா?
நம்முடைய எல்லோருக்கும் நேரம் என்பது பெரிய பிரச்சினையா உள்ளது. நமக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் அவசரமாக பதிவு எழுதினாலும், நாம் பதிவு எழுதி முடித்தவுடன் மீண்டும் முதலில் இருந்து வாசிக்க வேண்டும். அவசரத்தில் ஏதேனும் வரியை விட்டிருக்கலாம், அல்லது ஒரே வரியை இரண்டு முறை முறை டைப் செய்து இருக்கலாம், ஏதேனும் ஒரு இடத்தில் வாக்கியங்கள் மாறுபட்டுட்டு இருக்கலாம், அல்லது ஏதேனும் பத்தியை முடிக்காமல் அடுத்த பத்திக்கு தாவி இருக்கலாம் இது போன்ற பிழைகளை கண்டறிய பதிவை முடித்த பின் ஒரு முறை படிப்பது சிறந்தது.
2.பதிவிற்கான படங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா?
ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஒரு பதிவில் நாம் கூற வரும் விஷயம் வாசகர்களிடையே எளிதாக சென்று சேர படங்கள் என்பது இன்றியமையாத ஒன்று. அல்லது பதவில் நகைச்சுவைக்காகவும், வாசகர்களை கவரும் விதமாகவும் பல விட படங்களை பதிவில் இணைக்கிறோம். பதிவை டைப் செய்து முடித்தவுடன் அதற்க்கான படங்களை சேர்த்து விட்டோமா, சேர்த்துள்ள படங்கள் அனைத்தும் சரியான இடத்தில் உள்ளதா என சோதித்து கொள்வது நல்லது.
3) லிங்க் சரி பார்த்தல்:
ஒரு பதிவில் ஏதேனும் இணைய தளங்களுக்கு லிங்க் கொடுப்பதாக இருந்தாலோ அல்லது உங்களுடைய முந்தைய பதிவிற்கு லிங்க் கொடுப்பதாக இருந்தாலோ பதிவை முடித்த பின் லிங்க் கொடுத்து விட்டோமா என சோதித்து கொள்வது நல்லது. அது மட்டுமில்லாமல் நீங்கள் கொடுத்த லிங்க் சரியாக இயங்குகிறதா, கிளிக் செய்தால் சரியான இடத்திற்கு செல்கிறதா என சோதித்து கொள்ளவும்.
4) பிழை சரிபார்த்தல்:
சமீபத்தில் இந்த எழுத்து பிழையால் பதிவுலகில் பெறும் பிரச்சினை ஆனதை அனைவரும் அறிவோம். பதிவில் எழுத்துப்பிழை ஏற்படுவது இயல்பு தான். எழுத்துப்பிழை இல்லாமல் எழுதுவது மிகவும் அரிது ஆனால் பதிவை முடித்தவுடன் மீண்டும் வாசிப்பதால் நாம் தவற விட்ட எழுத்துப்பிழைகளை கணிசமாக குறைக்க முடியும். எழுத்துப்பிழையை குறைத்தால் வாசகர்களுக்கும் நம் பதிவு சுலபமாக புரியும். முடிந்த அளவு எழுத்துப்பிழையை குறைத்து கொள்வது நல்லது.
5) PREVIEW பார்த்தல்:
பிளாக்கரில் PREVIEW என்ற ஒரு வசதி உள்ளது. Publish பட்டனுக்கு அருகிலேயே இந்த PREVIEW பட்டனையும் கொடுத்து இருப்பார்கள். அந்த PREVIEW பட்டனை கிளிக் செய்தால் உங்களுடைய பதிவு பப்ளிஷ் செய்யப்பட்ட பிறகு வலைப்பூவில் எப்படி தெரியும் என முன் கூட்டியே பார்த்து கொள்ளலாம். பதிவர்கள் பப்ளிஷ் செய்வதற்கு முன் இந்த வசதியை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
6) தலைப்பு சரிபார்த்தல்:
பதிவு மட்டுமல்ல எல்லாத்துக்குமே தலைப்பு ரொம்ப முக்கியம். ஒரு பதிவின் தலைப்பு என்பது பதிவிற்கு சம்பந்தமாகவும் அதே சமயம் வாசகர்களை கவரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். பதிவின் தலைப்பை முடிந்த அளவு சிறியதாக வைக்க வேண்டும் ஆனால் பதிவின் பொருள் மாறிவிடக்கூடாது. பதிவிற்கு சம்பந்தமாக தலைப்பு வைப்பதால் தேடியந்திரங்கள் மூலம் வரும் வாசகர்களுக்கு சரியான பதிவை அடையாளம் கண்டறிந்து வர உதவும்.
7) ஹிட்ஸ் கிடைக்க ஏற்ற நேரமா என சோதித்தல்:
தரமான பதிவுகள் எந்த நேரத்தில் வெளியிட்டாலும் அதிக வாசகர்களை கவரும் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். ஒரு பதிவர் தான் வெளியிடும் பதிவு பெரும்பாலான வாசகர்களுக்கு சென்று சேர வேண்டும் என நினைப்பார். நிறைய பேருக்கு போய் சேர வேண்டும் என மனதில் நினைத்து கொண்டு இரவு 12 மணிக்கு(பேய் வரும் நேரத்தில்) பதிவு போட்டால் யார் படிப்பார்கள். காலைக்குள் உங்கள் பதிவுகள் திரட்டிகளில் பின்னுக்கு தள்ளப்பட்டு விடும். ஆகையால் பதிவை வெளியிடும் பொழுது தக்க நேரத்தில் வெளியிடவும்.
8) Schedule போஸ்ட் என்றால்:
உங்களுடைய பதிவை Schedule செய்து குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே பப்ளிஷ் ஆகும் படி வைக்க எண்ணினால் பப்ளிஷ் செய்வதற்கு முன் நேரத்தை தேர்வு செய்து விட்டீர்களா என சோதித்து கொள்ளவும். நேரத்தை தேர்வு செய்யாமல் பப்ளிஷ் பட்டனை அழுத்தினால் எப்பொழுதும் போல பப்ளிஷ் ஆகிவிடும். ஆகையால் பதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன் இதை சோதித்து கொள்வது நல்லது.
ஒவ்வொரு பதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன்னரும் இந்த விஷயங்களை சரிபார்த்து பிறகு பப்ளிஷ் செய்யவும்.
நண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.
நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.
பதிவர் நண்பர்களே இந்த செய்தியை உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டு பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நம் சமூகத்தை காக்க உதவுங்கள்.
0 comments:
Post a Comment