இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. பத்து பேர் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை ஒரே ஒரு கணினி வைத்து கொண்டு அந்த வேலையை ஒரு நபர் பத்து நிமிடத்தில் செய்து முடிப்பதால் உலகளவில் கணினியின் ஆதிக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாகும். கணினி இயங்க முக்கிய தேவைகளில் ஒன்று ஆப்பரேட்டிங் சிஸ்டம். இது தான் ஒரு கணினியின் அடித்தளம். இதில் சிறந்து விளங்குவது விண்டோஸ் எனப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகும். இது பிரபல கம்ப்யுட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டால் உருவாக்கப்பட்டது. எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ, அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணினியில் புகுந்து நம் கணினியில் புகுந்து நாம் கணினியில் விதிர்க்கும் டேட்டாக்களை முடக்கி கடைசியில் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது.
0 comments:
Post a Comment