இணைய பிரவுசர்கள் போட்டி போட்டுகொண்டு வாசகர்களுக்கு புதிய வசதிகளை வழங்கி கொண்டுள்ளனர். தற்போது தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் IE 9 என்ற புதிய பதிப்பை வெளியிட்டது. அதைபார்த்த மொசில்லா நிறுவனம் தனது பிரவுசரான பயர்பாக்சில் அசத்தலான மாற்றங்கள் செய்து தனது புதிய பதிப்பான Firefox 4 வெளியிட்டு டவுன்லோடில் சாதனை படைத்தது. இதையெல்லாம் பார்த்த கூகுள் நீங்க மட்டும் தான் வெளியிடுவீங்களா நாங்களும் விடுவோம் என்று கூகுள் நிறுவனம் பல்வேறு வசதிகளை கொண்ட புதிய பதிப்பான Google Chrome 11 என்பதை வெளியிட்டு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என நிருபித்துள்ளது. எது எப்படியோ பங்காளிங்க சண்ட போட்டா கூட்டாளிகளுக்கு கொண்டாட்டம் என்பது போல மாறி மாறி நமக்கு வசதிகளை கொடுக்கும் இணைய பிரவுசர்களுக்கு முதல்ல ஒரு நன்றி சொல்லிடுவோம்.
0 comments:
Post a Comment