கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவை நிறுவனமான ஜிமெயிலில் வாசகர்களின் பயன்பாட்டிருக்கு ஏற்ப புதிய வசதிகளை அறிமுக படுத்தி கொண்டே இருக்கின்றனர். நமக்கு யாரேனும் ஜிமெயிலில் போட்டோக்கள்(jpg,png,gif), டாகுமென்ட்(doc,xls,ppt) மற்றும் PDF பைல்களை அனுப்பினால் நாம் இந்த பைல்களை நம்முடைய கணினியில் டவுன்லோட் செய்து பின்னர் ஓபன் செய்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் டாக்ஸ்(Google Docs) உதவியுடன் ஆன்லைனிலேயே பார்த்து கொள்ளும் வசதியை ஜிமெயில் நமக்கு வழங்கி உள்ளது. இதனால் நமக்கு டவுன்லோட் செய்யும் நேரம் குறைவதுடன் லிமிட்டட் இணைய இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் நமக்கு அனுப்பப்படும் பைல்களை கம்ப்ரெஸ்(.zip .rar) பைல்களாக இருந்தால் நம்மால் ஆன்லைனில் அந்த பைல்களை பார்க்க முடியாது டவுன்லோட் செய்து தான் பார்க்க முடியும்.
0 comments:
Post a Comment