பாமினி எழுத்துருவை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். கணினியில் டைப் செய்ய பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்தும் எழுத்துரு(font). தமிழ் உபயோகப்படுத்தப்படும் கணினியில் நிச்சயம் இந்த எழுத்துரு(font) இருக்கும். நம் கணினியில் உள்ள பெரும்பாலான மென்பொருட்கள் இந்த எழுத்துருவை சப்போர்ட் செய்வதால் பெரும்பாலனவர்கள் இதை உபயோகிக்கிறோம். ஆனால் இதில் என்ன பிரச்சினை என்றால் இந்த எழுத்துருவை உபயோகிக்க நமக்கு தமிழ் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும் அல்லது அதிகமான பயிற்சி இருந்தால் மட்டுமே இந்த எழுத்துருவை பயன்படுத்தி தமிழில் டைப் செய்ய முடியும்.இல்லையேல் பயன்படுத்துவது மிகவும் சிரமம். மற்றும் இணையத்தில் தமிழில் எழுத இந்த எழுத்துருவை பயன்படுத்த முடியாது. அதற்க்கு பாமினி எழுத்துருவை யுனிகோடாக மாற்றினால் தான் பயன்படுத்த முடியும்.
0 comments:
Post a Comment