கூகுள் நிறுவனம் தனது புதிய சமூக தளமான கூகுள் பிளசை வெற்றி பாதையில் அழைத்து செல்ல பலமுயற்சிகளை கையாண்டு வருகிறது. குறிப்பாக இந்திய வாசகர்களை கவர்வதில் அதிக கவனம் கொடுத்து வருகிறது. முதல் கட்டமாக இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் கூகுள் பிளசில் இணைத்தது. இந்தியர்கள் கிரிக்கெட்டின் தீவிர ரசிகர்கள் என்பது உலகமறிந்த உண்மை இது கூகுளுக்கு தெரியாதா என்ன? இப்பொழுது தனது அடுத்த கட்டமாக இந்திய கிரிக்கெட் வீரர்களை கூகுள் பிளசில் இணைய வைத்துள்ளது கூகுள் நிறுவனம்.