(இந்த பதிவுக்கு Comment moderate கிடையாது நேரடியாக உங்கள் கருத்துக்கள் பப்ளிஷ் ஆகும்)
நான் ஆங்கில தளத்தின் தகவல்களை காப்பி அடிப்பதாக நிறைய பேர் குறை கூறி உள்ளனர். அப்படின்னா என் தளம் ஆங்கில தளமா. செய்திகளை பார்க்கிறேன் பகிர்ந்து கொள்கிறேன். தொழில் நுட்பத்தை என்னால் கண்டுபிடிக்க முடியாது அந்த அளவுக்கு அறிவாளியும் இல்லை.சில பிளாக்கர் டிப்ஸ்களை ஆங்கில தளத்தில் இருந்து காப்பி அடிக்கிறேன் காப்பி அடிக்கிறேன் என்று சொல்றீங்களே அதே எவ்வளவு பேருக்கு பயனுள்ளதாக உள்ளது அதை பார்க்க மறுக்கிறீர்களே அது ஏன்.எவ்வளவு பேர் அவர்களின் தளங்களில் இந்த விட்ஜெட்களை போட்டு
பயனடைகின்றனர் என்று பார்க்க உங்கள் மனம் ஏன் தடுக்கிறது.
அந்த தளத்தில் உள்ள கோடிங்கை புரிந்து அதை மற்றவர்களுக்கு சேர்க்க கொடுப்பது தவறா. ஏன் இந்த பொறாமை குணம் தமிழனுக்கே உரித்தானதா. இதே ஆங்கில தளத்தில் காப்பி செய்து போட்டு இருந்தால் Very Nice இன்னு கமென்ட் போட்டுட்டு உன் தளத்தில் போட்டுக்க மாட்டியா. தமிழன் பிரபலமான உங்களுக்கு எரிச்சலாக இருக்கா.
ஒண்ணு சொல்றேன் கேளுங்க ஆங்கில தளங்களும் மற்ற தளத்தில் இருந்து காப்பி செய்து சிறிது மாற்றம் செய்து தான் போடுகின்றன.
வெறும் காப்பி மட்டும் செய்து போட்டால் போதாது என்னால் முடிந்த வகையில் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து சந்தேகங்களை தீர்க்கிறேன்.
நான் காப்பி அடித்தது தவறா இல்லை பிரபலமானது தவறா?
கிரிக்கெட் பதிவு எழுதுபவர்களுக்கு:
- கிரிக்கெட்டை இவர்கள் தான் கண்டுபிடித்தார்களா
- புள்ளி விவரங்களை இவரே கண்டு பிடித்து எழுது கிறார்களா
- பரம்பரை பரம்பரையாக தாத்தா அப்பா இவர் என்று புள்ளி விவரங்கள் சேமிக்க படுகிறதா.
*********************************
சினிமா விமர்சனம் எழுதுபவர்களுக்கு:
- படத்தில் பார்த்ததை நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர். அப்படி என்றால் படத்தில் இருந்து காப்பி அடிக்கிறார்கள் என அர்த்தமா.
- ஆங்கில படங்களை பற்றி பகிர்ந்தால் ஆங்கில படங்களில் இருந்து காப்பி அடித்து எழுது கிறார்கள் என அர்த்தமா.
சிறிய அன்பான வேண்டுகோள்:
இப்பொழுதெல்லாம் ஏதேனும் படத்தை பார்க்க வேண்டுமென்றால் முதலில் அதற்க்கான விமர்சனங்களை பதிவுலகில் பார்த்த பிறகே நல்ல விமர்சனம் இருக்கும் படத்தை பார்க்க வேண்டிய எண்ணம் தோன்றுகிறது. மற்ற படங்களை பார்ப்பது தவிர்க்க படுகிறது. ஒரு படம் என்பது தனிப்பட்ட ஒருவரின் உழைப்பை மட்டுமல்லாது நூற்றுகணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகிறது.
ஏற்க்கனவே திருட்டு விசிடியால் அவதிப்பட்டு வரும் திரை உலகத்திற்கு மேலும் சிக்கலை தரும் என்பதில் ஐயமில்லை. இங்கு பத்திரிக்கை சுதந்திரத்தை பார்க்காமல் இதனால் பாதிக்க படும் நூற்றுகணக்கான ஊழியர்களை மனதில் வைத்து கொள்ளவும்.
நீங்கள் விமர்சனம் எழுதுங்கள் குறைந்தது ஒரு 10 நாள் கழித்தாவது எழுதுங்கள்.
**********************************
லோஷன் என்பவர் தளம் எனக்கு பிடித்தது ஒன்று அதில் எவ்வளவோ பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தது உள்ளது. எவ்வளவோ நல்ல பதிவுகள் இருந்தும் இந்த சுமாரான பதிவை நான் காப்பி அடிக்க காரணம் என்ன. உனக்கு கிரிக்கெட்டை பற்றி என்ன தெரியும் என்று கேட்ட நண்பர்களிடம் கொடுத்த சவாலுக்கு அதை காப்பி செய்து என் பிளாக்கில் போட்டு இருந்தேன். காப்பி செய்வது தவறு என்றே எனக்கு அப்போது தெரியாது இதை நான் அவருக்கு மெயிலில் விளக்கமாக தெரிவித்தேன் ஆனால் அவர் அதை ஏற்க்கவில்லை. அவர் கூறிய உடன் அதை நான் நீக்கி விட்டேன்.இதற்காக அவரிடம் எத்தனையோ முறை மன்னிப்பும் கேட்டு இருந்தேன். linkwithin உபயோகித்து இருந்ததால் பதிவை அழித்தாலும் அந்த லிங்க் காட்ட பட்டே இருந்தது அதனால் தான் அந்த விட்ஜெட்டையே நீக்கினேன்.*****************************************
(இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல. சசிகுமார திட்டினா எதுவுமே கேட்க்க மாட்டான் இன்னு கண்டபடி திட்டுவதை நானும் எவ்வளவோ காலம்தான் கேட்டுக்கொண்டு பொறுமையாக இருப்பது,எனக்கும் உணர்வுகள் உள்ளனவே )
பிளாக்கர் டிப்ஸ் தருவது குற்றமென்றால் நான் இனி பிளாக்கர் டிப்ஸ் தகவலை தருவதா வேண்டாமா நீங்களே தயவு கூர்ந்து சொல்லுங்கள். இதனால் பாதிக்க படுவது நானல்ல.
தொடர்புக்கு - 99620 64266
தொடர்புக்கு - 99620 64266
0 comments:
Post a Comment