பிளாக் வைத்திருக்கும் நாம் அனைவரும் விரும்புவது நம்முடைய பிளாக் கூகுள் தேடலில் வரவேண்டும் என்பது தான். கூகுள் தேடலில் நம் பிளாக் வந்தால் நம் பிளாக்கின் ட்ராபிக் கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக கூகுள் தேடலில் ஒருவர் நம் பிளாக்கிற்கு வந்தால் அது திரட்டிகளில் இருந்து 5 பேர் நம் தளத்திற்கு வருவதற்கு சமம். இதனால் தான் ஒரு சில தளங்கள் குறைந்த ட்ராபிக் பெற்றிருந்தாலும் அலெக்சா ரேங்கில் முன்னேறி காணப்படும். ஆகவே நாம் அனைவரும் நம் பிளாக்கை கூகுள் தேடலில் கொண்டு வருவதற்கு பல்வேறு நுணுக்கங்களை கையாள்கிறோம். அதில் ஒன்று இந்த DMOZ டைரக்டரியில் நம்முடைய பிளாக்கை இணைப்பது. அது மட்டுமல்லாது பிளாக்கின் கூகுள் பேஜ் ரேங்க் உயர்த்தலாம்.
0 comments:
Post a Comment