கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடிமக்களால் உருவானது நம் தமிழ் மொழி.உலகிலேயே பழமையான மொழிகளில் நம் தமிழ்மொழியும் ஒன்று என்பதில் தமிழர்களாகிய நாம் பெருமை கொள்வோம். நம் தாய்மொழியில் வெளிவந்துள்ள இலக்கியங்களும், நூல்களும் மிகபழமை வாழ்ந்தவைகள். உதாரணமாக உலகத்தில் உள்ள பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூலான திருக்குறள் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது. திருக்குறள் மட்டுமின்றி நம் தாய்மொழியில் எவ்வளோவோ இலக்கிய நூல்களும் வெளிவந்துள்ளன. இந்த நூல்கள் நம் தமிழ் பண்பாட்டின் கலாசாரத்தையும் பழக்க வழக்கங்களையும் நமக்கு எடுத்துரைக்கிறது.
0 comments:
Post a Comment