பிளாக்கர் தளத்தின் மூலம் வலைப்பூவை உருவாக்கி அதன் மூலம் நாம் பல நம்முடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும், நட்பு வட்டத்தை அதிகர்க்கவும் பாலமாக நம் அனைவருக்கும் உள்ளது இந்த பிளாக்கர் தளம். என்னதான் எண்ணிலடங்கா வசதியை பெற்று இருந்தாலும் இதற்கும் ஒரு எல்லை என்பது உண்டு. நாம் கீழே பிளாக்கர் தளத்தின் எல்லைகள் யாவை என்பதை கீழே காணலாம்.
NUMBER OF BLOGS- ஒருவர் எத்தனை பிளாக் வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம். இதில் அளவே கிடையாது.
- NUMBER OF POSTS- இதிலும் எந்த எல்லையும் கிடையாது ஒருவர் எத்தனை பதிவுகள் வேண்டுமென்றாலும் போட்டு கொள்ளலாம்.
- SIZE OF POST - இதில் உங்கள் விருப்பம் போல் சுருக்கமாகவும் அல்லது நிறைய படங்களை சேர்த்து பெரியதாகவும் போடலாம். நிறைய படங்களை சேர்த்தால் உங்கள் பக்கம் திறக்க நேரமெடுக்கும் இதனால் வாசகர்களை இழக்க நேரிடலாம்.
- SIZE OF PAGES - உங்கள் பிளாக்கின் ஒவ்வொரு பக்கமும் 1mbக்கு மிகமால் இருக்க வேண்டும். இது முகப்பு பக்கத்திற்கும் பொருந்தும் ஆகையால் உங்கள் முகப்பு பக்கத்தில் நிறைய பதிவுகள் வரும் படி வைக்க வேண்டாம். 1MBக்கு அதிகமாக இருந்தால் உங்கள் பிளாக் திறக்கும் போது "006 Please Contact Blogger Support" என்று பிழை செய்தி வரும்.
- NUMBER OF COMMENTS- இதற்கும் ஒரு அளவு கிடையாது ஒரு பதிவின் எத்தனை கமென்ட் வேண்டுமென்றாலும் இருக்கலாம்.
- NUMBER OF PICTURES- ஒரு பிளாக்கில் அதிகபட்சம் 1GB அளவு படங்களை கூகுள் பிக்காசா மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.
- SIZE OF PICTURES- நீங்கள் மொபைல் மூலம் பதிவிடுபவராக இருந்தால் உங்களுடைய படம் 250KBக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- TEAM MEMBERS- நீங்கள் குழுவாக பதிவிடுபவர்களாக இருந்தால் குழுவில் அதிக பட்சம் 100 மட்டுமே இருக்க வேண்டும்.
- NUMBER OF LABELS- ஒவ்வொரு பிளாக்கும் அதிகபட்சம் 200 வெவ்வேறான வகைகளை பெற்று இருக்கலாம். ஒவ்வொரு தனி பதிவும் அதிகபட்சம் 20 வகைகளில் இணைக்கலாம்.
- BLOG DESCRIPTION - இதில் அதிகபட்சம் 500 characters இடம்பெறலாம்.
- PROFILE INFORMATION- அதிகபட்சம் 1200 characters இடம்பெறலாம்.
- PROFILE INTERESTS AND FAVOURITES- இதில் ஒவ்வொரு பகுதியிலும் அதிகபட்சம் 2000characters இடம் பெறலாம்.
(Source: Blogger Help)
டுடே லொள்ளு
மக்கா கவலையே படாதீங்க நமக்கு எப்பவுமே வெற்றி தான்.
0 comments:
Post a Comment